பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

வர்ணாஸ்ரமம்


சண்முகம், தமிழ்க்கலையிலே ஆர்வங்கொண்டிருப்பதால், நல்லது விளையுமேயன்றி நாசமா நேரிடும். விளக்கு, என்று அன்பரொருவர் கேட்கிறார். பழைய காப்பியங்களைப் படிக்கப் படிக்க, ஆரிய திராவிடப் போராட்ட உணர்ச்சி ஒழியும் என்பது, ஆரியருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஆகவேதான், தற்காலப் புத்தறிவுப் பிரச்னைகளைப்பற்றிப் பேசும்போதும் எழுதும்போதுங்கூடப், பழைய ஏடுகளுடன் அவைகளை இணைத்துக் காட்டுகின்றனர். இரு கருத்துகள் அவர்கட்கு, இரண்டும் இடையூறு உண்டாக்குவனவே ! ஒன்று இன்றைய உலகிலே புதிதாக ஒரு அறிவும் இல்லை, பழமையிலேயே யாவும் உள, என்று பேசுவதன்மூலம், புத்துலக உணர்வு வராமல் தடுப்பது.மற்றொன்று, அத்தகைய பழமை உணர்வின்படி நிற்பின், வர்ணாசிரமம் நிலைக்கும் என்பது. இவ்விரண்டும், நாட்டுமக்களை நலியவைத்து, "முகத்துதித்தோரை" முடிசூடா மன்னராக்கும் முறைக்குப் பயன்படுகின்றன. எனவேதான், நான் கலையருவியிலே கவலையுடன் ஆரியநாரை அமர்ந்திருக்கிறது, அதைக் கவனத்தில் வையுங்கள் என்று கூறினேன்.

எந்தச் சந்தர்ப்பத்தையும் நழுவவிடாதே! எதையும் உனக்குச் சாதகமான தாக்கிக் கொள்ளத்தவறாதே! என்பவை, ஆரியரின் இலட்சியம், இரண்டாயிரம் ஆண்டுகளாகவே! இதன்படியேதான், கலையையும் அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் புகுத்தும் கருவியாக்கினார்கள். உணவு கண்முன் ஊசலாடுகிறது. என்ற உவகையுடன் துள்ளிக் குதிக்கும் மீனுக்குத் தூண்டிலே தூக்குமரமாகிறது! அதுபோலக் கலை-