பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

43


லேயே நான், "கலையின் பேரால் ஆரியர் நடத்தும் சூது இது, எச்சரிக்கை" என்றுரைக்கிறேன்.

பழைய காப்பியங்களைப் படித்துக் கலையுணர்வு பெறுவது, இன எழுச்சியைச் சாகடிக்கும் நச்சு, என்ற மித்திரன் வாசகம், ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதென்பது என்கருத்து. ஒருவரை மற்றொருவர் அடிமைகொள்ள, வசியப்படுத்த, வீழ்த்த, வகை பல உண்டு. முறை பல உண்டு. வீரர் வேல்கொண்டு போரிடுவர், தமது ஆற்றலையே, ஆதிக்க அளவுகோலாகக்கொண்டு. வீரமற்று வஞ்சக உள்ளங் கொண்டோர், மறைந்திருந்து தாக்குவர், மாற்றாணை மாய்த்திட எம்முறையும் ஏற்றதே என்று கூறுவர். மராமரங்களுக்குப் பின்புற மிருந்து வாலியைக்கொன்ற ஆரிய இராமன்போல! நண்பனாக நடித்து நயவஞ்சகத்தால் காரியத்தைச் சாதிக்கும் கயவரும் உண்டு! எதிர்ப்போனின், உடன்பிறந்தாரையோ, ஏவலரையோ, விலைக்குப்பெற்று, விபீஷணாஸ்திரத்தால் வீரனை வீழ்த்தும் வகையுமுண்டு. மாயமொழி பேசியும் மாற்றானை மாய்ப்பதுண்டு ! எதிரியின் ஏமாளித்தனத்தைத் தெரிந்து அவனைச் சாய்ப்பவருமுண்டு. உலகம் பலவிதம். கரியைப் பிடித்திழுத்துக் கரகர வெனச் சுழற்றி அடிக்கும் வீரனானாலும், காமவல்லிகளின் கடைக்கண் பார்வையாலோ, புன்சிரிப்பெனும் பாணத்தாலோ, அதரமெனும் அஸ்திரத்தாலோ, அடியற்ற நெடும் பனையாவதுமுண்டு. தேவர்கள் யாவரையும் தீர்த்துக்கட்டும் மாவலிபெற்ற அசுரர்கட்கு, அமிர்தம் தந்திடின், அமரர் உலகு அசுர உலகாகுமென்றெண்ணிய அரி, அழகி உருக்கொண்டு ஆடிப்பாடி