பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

47


ணனை ஆனையாக்கியனுப்பி வள்ளியைப் பயமுறுத்தி மணம்புரியும் வேலன்கதை வீடுதோறும் புகுந்தது. காண்கிறோம். சங்கநூற் சித்திரம் சிலருக்கே தெரியும்; புராணக் குப்பையோ, தெரியாதார் மிகமிகச் சிலரே.

சங்க நூற்களிலே, மந்திக்குக் கனி பறித்தீயும் காதற்கடுவனைப் பற்றிய சித்திரம் காண்கிறோம். பிறகோ, சஞ்சீவி பர்வதத்தைப் பெயர்த்தெடுக்கும் சர்வ பண்டிதனாம் அனுமனைக் காண்கிறோம். உண்மை உவமையை உரைத்த உயர் நூலை அறிந்தோர் சொற்பம்; புராணப் புளுகைப் போற்றிடுவோரோ, பெருந் தொகையினர். ஆண்மான் பெண்மானுக்குத் துணை நிற்கும் அழகிய காதலறத்தைக் காட்சியாக்கிய கவிதை படித்த தமிழனுக்கு, மாரீசனின் மாய மான் கதை கலையாக்கப்பட்டு விட்டது! முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம், பாலை,எனும் நிலப்பண்பு தெரிந்து இன்புற்ற இயல்பு முன்பு! பிறகோ, நாலுவர்ணமெனும் நச்சுப்பொய்கையில் நெளியும் நிலைமை!! கலையின்பேரால், ஆரியக் கற்பனைகள், தமிழரின் கருத்திலே தூவப்பட்டு விட்டன. இதனை நன்கறிந்தே சுதேசமித்திரன், "கலையுணர்வு பெறப் பண்டைய காப்பியங்களைப் படித்திடட்டும் சர் சண்முகம், அதன்மூலமாகவே அவரை முறியடிக்க முடியும்" என்று கருதுகிறது. முடியுடை வேந்தரையும் வீரரையும் வீழ்த்தியமுறை அதுவன்றோ, சர் சண்முகம் மட்டும் என்ன, தப்பவா போகிறார், என்று மித்திரன் கருதுகிறது. நறுமலர்க் கூடையிலே நச்சரவு இருந்திடின், மலர்தேடும் கையிலே விஷப்பல்லன்றோ தீண்டும் ! பழைய காப்பியத்திலே பிரேமை அதிகரித்தால், திராவிடப்பண்பு பாழ்பட வழி