பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

வர்ணாஸ்ரமம்


இருக்கிறது என்பதறிந்தே, சுதேசமித்திரன் அந்தச் சொல்லை வீசியிருக்கிறது. உண்மையிலேயே, சர் சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கக் காப்பியக் கடலிலே மூழ்கிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே, ஆரிய அலை மோதுகிறது. சனாதனமெனும் சுறாமீன்கள் உலவுகின்றன, வர்ணாசிரமம் எனும் வாயகன்ற திமிங்கிலமுளது, என்று எச்சரிக்கை செய்யாவிடின், எனக்கு அவர்பால் உள்ள அன்பினை மறந்தவனாவேன். கலையுலகிலே, அவர் உலவுவது, ஆரியபுரிக்கு அவரை அழைத்துச் செல்லாதிருக்கவேண்டும். கலையார்வத்திலே ஈடுபட்டு, ஆரியராவது திராவிடராவது, என்று கூறிடும் முத்துரங்கமாகவோ, இகலோகத்தைப்பற்றி இவ்வளவு கவலைப்பட்டுக் கிடப்பானேன் பரலோகத்தைப் பற்றியன்றோ சிந்தனை செயல்வேண்டும் என்று கூறிடும் பாராயண பக்தராகவோ, மாறிடாதிருக்கவேண்டும்.

 

 

Printed at KABEER PRINTING WORKS, Madras. Ms. 524
For Southern Publishers Pudukottah L,Dis. No. 116.