பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மனப் பிராந்தி

-

இது ஒரு மனநோயாகத்தான் இருக்கவேண்டும்.

அல்லது பைத்தியத்தின் ஆரம்பகட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுகிறது.

ஆனால் ஒன்று மட்டும் நான் நிச்சயமாகச் சொல்ல முடியும். நான் ஒரு கோழை. பயந்தாங்கொள்ளி, ஆமாம். இதைப்பற்றி எனக்கு "இத்னியூண்டு சந்தேகம்கூடக் கிடையாது. -

நான் சூரப்புலி மாதிரி வாயடி அடிப்பதைச் சிலர் கேட்டிருக்கக் கூடும். அது எனது மனசின் அடிமட்டத்தில் பரவியிருக்கிற பயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக நான் கையாள்கிற தந்திரம்தான்.

இருட்டில் வெளியே செல்வது என்றாலே என்னை வெட்டக்கொண்டு போவதுபோல் தோன்றும் விளக்குகள் சற்றைக்கொருதரம் ஒளிப்பூக்கள்போல் தொங்கும் வீதிகள் நிறைந்த நகரத்திலேயே எனக்கு இந்த நிலை என்றால், இருட்டின் கொலு மண்டபமாக விளங்குகிற பட்டிக் காடுகளில் தங்கியிருக்கிறபோது நான் என்ன பாடுபடுவேன் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம்.

கற்பனை - அதுதான் எனது கோளாறுக்கு மூலவித்து என்று எனக்கு இப்பொழுது தெரிகிறது. தெரிந்து என்ன செய்ய?

அழிக்க முடியாத நச்சுமரமாக அது வளர்ந்து என் உள்ளத்திலே மண்டி உணர்வுகளை ஆட்டி வைக்கிறதே