பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

வல்லிக்கண்ணன் முணுமுணுத்தார். அவர் கண்களில் கூட நீர் மல்கியது. தனது பலவீனத்தை மற்றவர்கள் கண்டு கொள்ளக்கூடாதே என்ற பரபரப்போடு எழுந்து வெளியே போய்விட்டார் பிள்ளை.

முருகையா அழுதுகொண்டே இருந்தான். விளையாட்டில் தோல்வியுற்று அடிபட நேர்ந்ததும், படிப்பில் வெற்றி பெற்றும் அடி தின்ன" நேர்ந்ததும் வாழ்வின் வேடிக்கைகளாகப் படவில்லை அவனுக்கு வேதனைகளாகத் தான் உறைத்தன. தந்தை அடித்தது அவன் பிஞ்சு உள்ளத்தில் வடு உண்டாக்கியது. அவர் அன்புடன் தடவிக் கொடுத்ததும், துயரத்தோடு முனங்கியதும் அவனுடைய இளம் உள்ளத்தில் இனம் புரிந்துகொள்ள முடியாத ஒரு வேதனையையே புகுத்தின. எனவே அவன் அழுது கொண்டே கிடந்தான்.

k