பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்- o #43 வருகிறபோதெல்லாம். அது சாவகாசமாக நின்று ஆராய்ச்சி செய்யாமல் திரும்பிவிடத் துடிப்பதே கிடையாது.

அலமாரியில் வசீகரமான, வர்ணமயமாக, எடுப்பான வெளிச்சத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிப்புத் தினுசுகளை ஆசையோடும் ஆர்வத்தோடும் பார்த்துக்கொண்டே நிற்கும் ډئکي}gز{. அங்கே அருகில் உள்ளவனிடம் "அது என்ன? இது என்ன? அதன் விலை எவ்வளவு? இதன் விலை எவ்வளவு? என்று விசாரிக்கும். அவனுக்கு அதன் தொன தொணப்பு தொல்லையாகவே படும். ஒன்றிரண்டு தடவை பதில் சொல்லிவிட்டு பிறகு "சீ போ!' என்று அவன் எரிந்து விழுவதே இயல்பாகும். முடிவில் அச்சிறுமி "கொஞ்சம் பக்கடாத் தூள்கொடேன் என்று கேட்டபடி கையை நீட்டும். சில சமயம் கேட்டது கிடைக்கும் சில சமயம் கிடைக்காமலும் போகலாம். கிடைத்து விட்டால் அது அதிக மகிழ்ச்சி அடைவதுமில்லை. கிடைக்காது போயின் வருத்தப்படுவது மில்லை. வழக்கம்போல் சிரித்துக் கொண்டே திரும்பிவிடும்.

விளம்பரப்பகட்டும் வியாபார தடபுடலும்மலிந்துவிட்ட நாகரிக நகரத்தில் மக்களின் எண்ணத்தை, ஏக்கத்தை, ஆசையை, கனவை எல்லாம் தூண்டி விடுவதற்கு வேண்டிய வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. அந்தச் சிறு பெண்ணின் உள்ளம்கூட நிறைவேற முடியாத எண்ணங்கள் மலரும் வனமாக, அடக்க இயலாத ஏக்கங்கள் மண்டும் குகையாக, தீர்த்து வைக்க முடியாத ஆசைகள் அலைமோதும் கடலாக அனுபவ. சாத்தியமற்ற கனவுகள் நிழலாடும் அரங்கமாகத்தான் திகழும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் அந்தக் குழந்தை ஒரு ப்ோதுகூடத் தன் சிரிப்பை மறந்து விடவேயில்லை. அதுதான் அந்தச் சிறு பெண்ணிடம் காணப்பட்ட விசேஷச் சிறப்பு. .. -

அதன் தன்மைக்காக அதைப் பாராட்டலாம். தாராளமாக ஸ்வீட்டும் ஐஸ் கிரீமும் வாங்கிக் கொடுக்கலாம் என்று நான் அடிக்கடி எண்ணுவது வழக்கம். ஆனாலும் ஒரு தடவை கூட நான் அவ்வாறு செய்ததில்லை. காரணம்.என் எண்ணத்தின் வள்ளல்தனத்துக்கு வேலி போடும் உரிமை எனது பொருளாதாரத்துக்கு இருக்கிறது. நித்திய நிரந்தர பற்றாக்குறை" என்ற பெருமையை உடையது எனது பொருளாதார நிலை. பையிலே உள்ள அணாக்களை எண்ணிப்