பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鷲 பெரிய மனசு |

வளர்த்துவரும் பொருளாதாரம் நினைத்தவருக்கு நினைத்ததை வாங்கி அருளத் துணை புரியுமா என்ன?

என்றாலும்கூட ஒரு நாள் என்பையில் முழுசாக ஒரு ரூபாய் இருந்தது.ஒரு ரூபாய் ஆகா, அதற்கு என்னென்னவெல்லாமோ வாங்கலாமே. அழகு அழகான வர்ணப் படங்கள் நிறைந்த சினிமாப் பத்திரிகையை வாங்கிக் கண்களுக்கு விருந்து கிட்டும்படி செய்யலாம். பழைய புத்தகக் கடையில் பல புத்தகங்கள் வாங்கி அறிவுக்குத் தீனிபோடலாம். இரண்டு வேளை முழுச்சாப்பாடு சாப்பிடலாம். எட்டுக் கப் காப்பி சாப்பிடலாம். (கப் இரண்டரை அணா என்று பில் போடுகிற சுரண்டல்காரர்கள் கடைகளை எட்டிப் பாராமல் இருந்தால்தான் ஆகா. ஒரு ரூபாயை வைத்துக்கொண்டு என்னதான் செய்யமுடியாது?

அந்தச் சமயத்தில் ஆனந்தி வழக்கம்போல் குதித்துக்கொண்டு வந்தது. அச்சிறு பெண் சதா ஆனந்த மயமாகவே இருந்ததால் என் மனம் அதை ஆனந்தி என்று குறிப்பிடுவது வழக்கம். அதன் பெயர் எனக்குத் தெரியாது என்றுதான் நான் முதலிலேயே சொல்லி விட்டேனே!

சிரித்தபடி வந்த சிறுமி கேட்டது "ஒட்டலுக்கா? என்று.

"ஆமா, நீயும் வாறியா?"

"ஏன்?"

"பாலந்தி வாங்கத ಹಗpr -

இன்று இந்தப் பெண்ணுக்கு எது வேண்டுமானாலும் வாங்கிக் கொடுக்கலாம் என்றது என் மனம். -

"பாஸந்தியா? அது ೯LLಿ. இருக்கும்? "ஜோராக இருக்கும்"

"நான் இங்கேயே நிற்கிறேன். நீ வாங்கிட்டு வாயேன் என்றது குழந்தை.

"அதுக்கு தட்டோ கிண்ணமோ தேடணுமே!

"சும்மா கையிலேயே எடுத்திட்டுவாயேன்