பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அது என்ன விலை?"

"மூணு அனா."

"மூணு அனா யின்னா മുഖഖണ്ടു தானே?" -

மூடியிருந்த விரல்களை விரித்து, கையை நீட்டிக் காட்டியது. அதில் இரண்டு நயா பைசாக் காசுகள் மூன்று இருந்தன.

"ஊகும். இது ஓர்னாதான் என்றான் ஸெர்வர்.

"ஓரணாவா? இவ்வளவும் சேர்ந்தது ஒரு அணா தானா?" என்று கேட்டது குழந்தை.

"ஆமா." "இதுக்கு என்ன வாங்க முடியும்?" "வடை வாங்கலாம். அல்லது ஒரு இட்டிலி வாங்கித் தின்னு." "து. அது யாருக்கு வேணும்?" என்றது அது. பிறகு மைசூர் பாகையும். ஜாங்கிரியையும், பாதுஷாவையும் சுட்டிக்காட்டி கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தது. - . -

அவனோ பொறுமை இழந்தவனாய் எரிந்து விழுந்தான். "சீ போ என்று அதட்டினான்.

அந்தப் பெண்ணின் முகத்தில் ஏமாற்றத்தின் சாயை படர்ந்தது. இன்று நிச்சயமாக ஒரு ஸ்வீட் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை அதன் பிஞ்சு உள்ளத்திலே பதிந்து கிடந்தது போலும், அது பாழாகிவிட்டது. அதன் நடையில் சிறிது வாட்டம் காணப்பட்டது.

வெளியே வந்ததும், அது அங்கு மிங்கும் பார்த்தபடி நின்றது.

சற்று துரத்தில் ஏதோ பரபரப்பு சிறு கூட்டம், அது சிறுமியின் கவனத்தைக் கவர்ந்தது கால்களை அங்கே இழுத்தது. . . .

நொண்டியான சிறுமி ஒருத்திரஸ்தாவைக் கடந்து வந்தாள். அதே சமயம் கார் ஒன்று வேகமாக வந்தது. நல்ல வேளை, அவள் பிழைத்தது ஆச்சரியம் தான். யாரோ வேகமாக நொண்டிப் பிள்ளையைப் பிடித்து இழுத்துப் பாதுகாத்தார்கள். அதற்காகத் தான் பரபரப்பும் கும்பலும்