பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ இ படிப்பும் பதவியும் "ஹேங் என ஒலி உதிர்த்தார் பெரியவர். உங்களுக்கு இதைவிட அதிகமாக எங்கே அள்ளித் தாறாகளாம்? குமாஸ்தா வேலைக்குப் போனாலும் உனக்கு என்ன கிடைக்கும்? எம்.எல்.ஏ. அறம்வளர்த்தநாதரின் செக்ரடரின்னு சொன்னா, அதுக்கு எவ்வளவு மதிப்பு உண்டு தெரியுமா? முன்னாலே ஒரு பையன் நம்மகிட்டே இருந்தான். அவனுக்கு சம்பளமின்னு நான் கொடுத்ததே கிடையாது. அவன் கேட்டதுமில்லை. அப்போ அப்போ செலவுக்கு என்று பத்து, இருவது கொடுப்பேன். ஆனால் அவன் சாமர்த்தியசாலி. எம்.எல்.ஏ.யின் செக்ரடரி - தனித்துவக் கட்சித் தலைவரின் காரியதரிசி என்ற ஹோதாவிலே புகழும் பணமும் பெறவேண்டிய முறை அவனுக்குத் தெரிஞ்சிருந்தது." - -

இளையபெருமாள் குறுக்கிட்டான். அதெல்லாம் வேண்டாம் ஸார். நியாயமான சம்பளம்.

"ஓகோ நான் அநியாயமாகவா பேசுறேன் உன்கிட்டே?. நம்க்கும் உனக்கும் சரிப்படாது ஐயா, போ. உடனே போய்ச் சேரு' என்று கட்டளையிட்டார் அவர்.

'நன்றி. மிக்க மகிழ்ச்சி" என்று கும்பிடுபோட்டுவிட்டு வெளியேறினான் இளையவன். - -

அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த சூரியன்பிள்ளை, ஆவலுடன், என்னடே? போன விஷயம் என்ன ஆச்சு? காயா, பழமா?" என்று விசாரித்தார்.

"ஒண்னும் ஆகலே என்ற இளையபெருமாள் நிகழ்ந்தது பற்றி அறிவித்தான். . o

பொறுமையோடு கேட்டிருந்த சூரியன் பிள்ளை படபடத்தார். "அட போ, புத்தி கெட்டவனே பிழைக்கத் தெரியாத பிள்ளை."

"பிழைக்கனுமே என்று எதை வேண்டுமானாலும் செய்யனுமாக்கும்? அவர் பதவி அவர்மட்டுக்கு சரியாகப் படிக்கக்கூடத் தெரியாத அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் செய்யனுமாம் எழுபத்தஞ்சு ரூபா தருவாராம்! என்று ஏளனமாகச் சொன்னான்.

படிப்பு இல்லே என்கிறதுனாலே அவருக்கு என்ன குறைஞ்சு போச்சு? பி.ஏ. படிச்சுக்கிழிச்ச நீ என்ன உசந்திட்டே? இல்லை