பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 劉 擬 கேட்கிறேன். மெத்தப் படிச்ச மேதாவிகள், பணக்காரனுக, பெரிய இடத்து ஆசாமிகள் எல்லாரும் இன்னிக்கு அவரு தயவை நாடி அவர் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிறாங்க. எத்தனையோ பி.ஏ.க்களும் எம்.ஏ.க்களும கவனிப்பாரற்றுக் கிடக்கிறாங்க. அப்படிப்பட்ட பெரியவருடைய செக்ரடரி என்றால் சும்மாதானா? எவ்வளவு கெளரவம் என்ன மதிப்பு எத்தகைய செல்வாக்கு என்று நீட்டினார் சூரியன் பிள்ளை.

"அதுக்காக, பண்பாடு குறைந்த வகையில். "சீ போ என்று சீறினார் பிள்ளை. இவரு பெரிய இவரு பண்பாடு, அது இதுன்னு பேச வந்துவிட்டாரு. பிழைக்கத் தெரியாத மடையன் என்று எரிந்து விழுந்தவாறே வெளியேறினார்.

இளைய பெருமாள் அலட்சியமாகச் சிரித்தான். "என்னவோ சொல்வார்களே-இருவேறு உலகத்து இயற்கை திரு வேறு தெள்ளியராதல் வேறு என்றா? அதை இப்படியும் சொல்லாம்னு தோணுது- X

பல்வேறு உலகத்து இயற்கை பணம் வேறு பதவி வேறு படிப்பு வேறு. பண்பும் வேறுவேறே: அவனுடைய அறிவின் மின்வெட்டை ஏற்று, ரசித்து, மகிழ்வதற்கு அருகில் யாரும் இல்லை. அவன் வெறும் நபர்தானே!