பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

籃 மனோபாவம்

స్గ

அதை வாங்கணும்? ஆரஞ்சுப் பழங்கள்தான் ஆஸ்பத்திரியிலேயே தருகிறாங்களே, உனக்குப் பணத்தின் மதிப்பு என்றைக்குத்தான் தெரியப்போகிறதோ? கண்ணு மூக்குத் தெரியாமல் பணத்தைக் காலி பண்ணிப்போட்டு, அப்புறம் கஷ்டப்படனுமா என்ன?" என்று உபதேசித்தார் அவர்

அதன் பிறகுதான் அவள் செய்த தவறு அவளுக்கே விளங்கியது நீண்ட பெருமூச்செறிந்தாள் விசாலாட்சி, "இன்னமே இப்படிச் செய்யலே என்று மன்னிப்பு கோரினாள் அவள்.

பிறகு விசாலாட்சியும் பிள்ளைகளும் வீடு திரும்பும்போது, "ஏய்! என்றார் குடும்பத் தலைவர்.

அவள் திடுக்கிட்டுத் திகைத்து நின்றாள்.

"இந்தப் பழங்களை எல்லாம் எடுத்துக்கிட்டுப் போ" என்று உத்திரவிட்டார் அவர்.

அவருடைய கோபம் அடங்காத கோபமாகத்தான் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது என்று பயந்தாள் விசாலாட்சி

"ஏன் முழிச்சுக்கிட்டு நிக்கிறே? பழங்களை எடுத்துப் பையிலே வை. வீட்டுக்குப் போனதும் குழந்தைகளுக்குக் கொடு. இங்கே இருந்தால் வீணாகத்தானே போகும் என்று கூறி, லேசாகச் சிரித்தார் பிள்ளை.

அவர் கோபமாகச் சொல்லவில்லை, குணத்தோடு தான் பேசுகிறார் என உணர்ந்த விசாலாட்சி தான் கொண்டு வந்த பழங்களை எடுத்துப் பைக்குள் போட்டாள்.

"இதையும் கொண்டு போ. இதை எல்லாம் குழந்தைகளுக்குக் கொடு நீயும் தின்னு" என்று உற்சாகமாகப் பேசி, ஆரஞ்சுப் பழங்களை அள்ளி அள்ளிப் பையினுள் போட்டார் பிள்ளை.

"அப்புறம் உங்களுக்கு வேண்டாமா?" என்று தயங்கித் தயங்கி விசாரித்தாள் விசாலாட்சி.

"இங்கே நிறையவே ஆரஞ்சுப் பழங்கள் தருகிறாங்க. சீக்காளியான ஒருவன் தின்னக் கூடிய அளவுக்கும் அதிகமாகவே கொடுக்கிறாங்க. எல்லாம் வீணாகப் போவதைவிட அல்லது