பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஜ ஒ உயர்ந்தவன் காற்றாடிகளை அறுத்து விழத் தட்டுவதிலும் ஆர்வம் பிறந்தது அவனுக்கு மேலே எவ்வுகிற பட்டத்தோடு தானும் உயர்ந்துவிடுவது போன்ற நம்பிக்கையும் ஆனந்தமும் ஏற்படுவது இயல்பு என்கிற மனத் தத்துவத்துக்கு உயிர்ப் பிரமாணமாக மாறி நின்றான் அந்தச் சோமாறி.

எப்படியானால் என்ன! 'நான் உயர்ந்தவன்' என்று நிரூபித்துவிட்ட பெருமையோடு தலை நிமிர்ந்து நடக்கலானான் செல்லையா. பார்வதி அம்மாள் வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

"திறமைசாலிகளை உலகம் உரிய முறையில் போற்றுவதில்லை. மேதாவிகளை சொந்தத் தாய்கூட மதிப்பதில்லை என்றுதான் செல்லையா எண்ணினான். அதற்காக அவன் வருந்தவில்லை. அவன்தான் எதற்காகவும் கவலைப்படுவது கிடையாதே விண் உண்டு காற்று உண்டு பறக்க விடக் காற்றாடியும் உண்டு" என்று தேர்ந்துவிட்ட பிறகு அவனுக்குப் புதுசாக ஏதாவது கவலை வந்துவிட முடியுமா என்ன?

>}: