பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! நல்ல மாறுதல் | ఇ 112 ஜன்னலின் பின்னால் நின்று உடல் மறைத்து முகத்தை மட்டும் காட்டி மகிழ்கிற யுவதிகள் முன் வாசலுக்கு வந்து முழு உருவமும் காட்டி மகிழ்விக்கக் கூடாது என்பது தான் அநாவசியமான எண்ணங்களை வைத்துக் கொண்டு "பஞ்சு வெட்ட விரும்பாத சிவப்பிரகாச உள்ளப் பண்பிலே கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டிருந்தது. ஜன்னலின் பின் தோன்றுகிற முகங்களில் எந்த முகம் மிகவும் அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் விளங்குகிறது என்று நினைக்கும் அவன் மனம் பெரியவளின் பார்வையிலே கவிதை இருந்தது; அவளது உதடுகள் நன்றாக இருக்கின்றன; சின்ன முகம் கொஞ்சம்பருமனாக, உருண்டு திரண்டு பம்ப்ளிமாஸ் பழம் போல காட்சி அளித்தது என்றது மனம். செச்சே! நானே இம்மாதிரி எல்லாம் நினைப்பது தப்பு' என்று உடனடியாகவே சீற்றம் காட்டும் சிறுதுயில் பயின்று கிடந்த மனச்சட்டாம்பிள்ளை. அதற்கப்புறம் அவன் உள்ளத்தில் அந்த அழகு முகங்களின் நிழல் ஆடாமல் நின்று விடுமா என்ன? அது சாத்தியம் இல்லையே! தாலைந்து தினங்களுக்குப் பிறகு அதிசயம் ஒன்று நடந்தது. சிவப்பிரகாசத்தைப் பொறுத்தவரையில் அது அதிசயம் தான், மற்றவர்களுக்கு அது சாதாரண நிகழ்ச்சியாகத் தோன்றினால், அதற்காக அவன் கவலைப் படமாட்டான். அன்று அவன் வழக்கம் போல் நடந்து வந்த பொழுது, வழக்கமான இடத்தில் வழக்கம் போலவே முகங்கள் காட்சி அளித்தன. ஆனால் அவை வழக்கத்திற்கு மாறுபட்ட விதமாகச் செயல் புரிந்தன. ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துக் - கொண்டு எதையோ உற்று நோக்குவதும் தொடர்ந்து அவன் முகத்தைக் கவனிப்பதுமாக இருந்தார்கள் சாளரத்து மோகினிகள் இரண்டு பேரும். அவர்கள் போக்கு விசித்திரமாகத் தான் தோன்றியது அவனுக்கு.