பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #3 & | வல்விக்கண்ணனின் மணியான கதைகள் இல்லை என்கிறேன்' என்று பேசியது மூத்த முகம், 'இல்லை, இல்லை என்று தான் சொல்கிறேனே!" ஆமாம் TSGpr நான்: 'இல்லேடி வசந்தா. இது வேறே. ஆமா-ஆமா-ஆமாம் என்று அழுத்தமாகக் கூவினாள் சின்னவள். 'ஏனோ இந்த அபிப்ராய பேதம்! என்று முனங்கியது அவன் மனம், சின்னவளின் பெயர் வசந்தா என்று தெரிகிறது. பெரியவளின் பெயர்தான் தெரியவில்லை. தெரிய வழியும் இல்லை என்று நினைத்தபடி நடந்தான் அவன். சந்தர்ப்பமே அவனுக்கு உதவிபுரிய வந்தது போலும்! சிவப்பிரகாசம் சில அடிகள் கூட கால் எடுத்து வைத்திருக்கவில்லை. 'ஸார், ஸார் என்று கத்திக்கொண்டு அவன் பின்னாலேயே சிறுவன் ஒருவன் ஓடிவந்தான். அவன் அந்த வீட்டினுள்ளிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆகவே, அவன் நின்றான். கையில் ஒரு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்த சிறுவன் அவனை அணுகியதும் சிரித்தவாறே கேட்டான். 'இதோ இந்தப் படத்தில் இருப்பது நீங்கள்தானே? என்று. சிவப்பிரகாசம் அந்தப் புத்தகத்தைத் தன் கையிலே வாங்கிக் கவனித்தான். யாரோ எழுதிய ஏதோ ஒரு நாவல். புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் அதன் ஆசிரியர் படம் காணப்பட்டது. அம் முகத்திலே தனது சாயல் தென்படுவதை அவனும் உணர்ந்தான், அதனால் அந்த உருவம் ஆகிவிட முடியுமா? 'என்ன ஸார்? இது நீங்கள்தானே? உற்சாகமாக விசாரித்தான் பையன்,