பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 # - - - - - 7 : வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் வளர்ச்சியின் முக்கிய கட்டம் நிகழ்ந்தது. அவன் அறிந்த வீட்டைச் சுட்டிக்காட்டி, இந்த வீட்டில்தான் ரசிகர் ரத்னசாமி இருக்கிறார்; அவரை உங்களுக்குத் தெரியுமோ? என்று கேட்டார் நண்பர். கேள்விப்பட்டிருக்கிறேன். தெரியாது' என்றான். அங்கே அப்பொழுது அழகு முகங்கள் காத்திருக்கவில்லை. 'அவர் நல்ல ரசிகர். கம்ப ராமாயணம் போன்ற இலக்கியங்களை ரசித்து உணர்ந்தவர். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்குவதிலும் அவருக்கு ஈடு அவரே தான் என்று நண்பர் தெரிவித்தார். 'ஒகோ, அப்படியா? என்று தலையை ஆட்டி வைத்தான் சிவம். - அவருக்கு இரண்டு பெண்கள் உண்டு.' 'ரசிகர் ரத்னசாமியை எனக்குத் தெரியாது. ஆனால் ரசிகர் வீட்டு ரத்தினங்களை நான் அறிவேன். அவர்களுக்கும் நல்ல ரசிகப் பண்பு இருக்கிறது என்று சிவப்பிரகாசம் நினைத்தான்; ஆனால் சொல்லவில்லை. அந்தச் சமயத்தில் அவ்வீட்டினுள்ளிலிருந்து ஒரு பெரியவர் வாசலுக்கு வந்தார். அங்கேயே நின்று தெருவைப் பார்த்தார், சுந்தரமூர்த்தியைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்தது. சுந்தரமூர்த்தி கைகூப்பி அவருக்கு வணக்கம் அறிவித்த போதே, இவர்தான் ரத்னசாமி என்று சிவப்பிரகாசத்திடம் மெதுவாகப் பேசினார். வாங்க வாங்க என்று வரவேற்றார் ரத்னசாமி. ஆகவே, அவர் வீட்டின் முன் அவ்விருவரும் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 'ஏது, இப்படி எங்கே புறப்பட்டீர்கள் இவர் யார் என்று விசாரித்தார் பெரியவர்.