பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல மாறுதல் త్య 11 8 உரிய பதிலை நண்பர் சொன்னார். 'அவசரம் ஒன்றும் இல்லையே? அப்போ வீட்டுக்குள்ளே வாருங்களேன்' என்று ரத்னசாமி அழைத்தார். அவர் அழைப்பை எப்படித் தட்டிக் கழிப்பது? எனவே இருவரும் அவரோடு உள்ளே சென்றார்கள். தங்கள் தந்தை யாருடனோ பேசிக்கொண்டிருப்பதை அறிந்து, அவர்கள் யார் என்று பார்ப்பதற்காக வெளியே எட்டிப் பார்த்தார்கள் பெண்கள் இருவரும் தந்தையுடன் நின்றவர்களில் சிவப்பிரகாசத்தைக் காணவும் அவர்களுக்குக் திகைப்பு ஏற்பட்டது. ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் முகமலர்ச்சியைக் கவனிக்க சிவப்பிரகாசம் தவறிவிடவில்லை. வீதிவழியே போகிறவன் வீட்டினுள் வருவதைக் கண்டதும் அந்தப் பெண்களின் வியப்பும் மகிழ்ச்சியும் அதிகமாயின. - ரசிகர் ரத்னசாமி முற்போக்கான கருத்துக்களை உடையவர் என்று புரிந்தது சிவப்பிரகாசத்துக்கு. ஏனெனில், அவன் எதிர்பாராதவிதமாகச் செயல் புரிந்தார் அவர், இவர்கள் என் புதல்வியர். இவள்தான் மூத்தவள். சாந்தா என்று பெயர். இவள் வசந்தா என்று அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் பெண்களிடம் இவ்விருவரையும் பற்றித் தமக்குத் தெரிந்ததைச் சொன்னார். . இவருடைய புதல்விகள் முற்போக்காக நடந்து கொண்டதில் வியப்பு இல்லைதான்! என்று எண்ணியது சிவப்பிரகாச மனம், 'சம்பிரதாயமான இந்த அறிமுகத்துக்கு முன்பே நமக்குள் அறிமுகம் ஏற்பட்டுவிட்டதே! என்று சொல்லிச் சிரிப்பதுபோல் குமரிகளின் கண்கள் மினுமினுத்தன. அவர்கள் புன்னகை புரிந்து நமஸ்காரம்’ . என்று முணங்கியவாறே கரம் கூப்பினர். அதன் பிறகும் அங்கேயே நிற்காமல் அவர்கள் அடுத்த அறையின் பக்கம்