பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் சிவப்பிரகாசம் எதிர்பாராத வேளையில் ரத்னசாமி அவனைத் தேடி வந்தார். சுந்தரமூர்த்தியையும் துணைக்கு அழைத்துக் கொண்டுதான் வந்திருந்தார் அவர், வாருங்கள், வாருங்கள்! என்று உற்சாகத்தோடு அவன் வரவேற்றான். அவருடைய வருகை அவனுக்கு அளித்த வியப்பைவிட அதிகமான திகைப்பைத் தந்தது அவர் பேச்சு. சுந்தரமூர்த்தியும் அவருமாகச் சேர்ந்து அவனுக்கு விஷயத்தைச் சொன்னார்கள். அவனுடைய அபிப்பிராயத்தைக் கோரினார்கள். ரத்னசாமியின் புதல்வி சாந்தாவை அவனது வாழ்க்கைத் துணைவியாக மாற்றுவது பற்றி ஆலோசனைதான். வலிய வரும் சீதேவியை வேண்டாம் என்று ஒதுக்கிவிட சிவப்பிரகாசம் அசடனோ, பித்தனோ, மடையனோ இல்லையே! ஆனால், பசியோடு இருப்பவன் உணவைக் கண்டதுமே பாய்ந்து பாய்ந்து அவசரம் காட்டுவது போலும் அவன் நடந்துகொள்ளவில்லை. நாகரிக தர்மங்களின்படி நாகுக்காகத்தான் தனது கருத்தை அறிவித்தான். அந்தப் பெண்ணின் அபிப்பிராயம் அல்லவா முக்கியம்' என்றும் சொல்லிவைத்தான். - * * 'சாந்தா தானே ? அவள் ஏன் தடை சொல்லப் போகிறாள்; அவளுக்குப் பூரண திருப்தி என்பதை அறிந்து கொண்ட பிறகு தான் நண்பரின் உதவியை நான் நாடினேன் என்றார் ரத்னசாமி. உங்களுக்கும் திருப்தி ஏற்படும் என்று எனக்குத் தெரியும். அன்றைக்கே நான் கவனித்தேன். அன்று நான் கூறிய நயங்களை நீங்கள் ரசிக்க முயன்றீர்களே அப்பொழுது நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தானிருந்தேன்" என்று சொல்லிவிட்டு அவர் உளம் நிறைந்த சிரிப்பை வாய்விட்டு ஒலிபரப்பினார். 'ஸார்வாள் பெரிய ஆளுதான்! என்று எண்ணியது அவன் உள்ளம். ஆகையினால் முன்பு அவனுடைய மனம் நிறைவேற்றிய தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள நேர்த்தது. அவன் ஒன்றும் சொல்லாமல் சிரித்துவைத்தான்.