பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 136 | அருள் பெற்ற அடிகளார் | இவனிடம் எதுக்கு வீண் தண்டா? என்று எண்ணிய ராமலிங்கம் நடைவண்ணம் காட்டத் தவித்தார். திருச்சிற்றம் பலத்தடிகள் பழையரிஷி பரம்பரையைச் சார்ந்தவர் தான். காய் கனி கடலை வகைகளைப் சாப்பிட்டே உயிர் வாழ்கிறார். அவர் உடலில் ஒரு விறு விறுப்பு மினுமினுப்பு முகத்திலே ஒரு சாந்தி, புன்னகையில் ஒரு கவர்ச்சி. பார்வையில் ஒரு தனி வசீகரம். ஆகா அவர் அருள் பெற்ற அடிகளார் தான் சந்தேகமே கிடையாது? என்று பரவசமுற்று பஜனை பாடினார் ஜோதி. வேய் நீரு வர்ணிக்கிறதைப் பார்த்தால், உமக்கு அவர் மீது காதலே ஏற்பட்டு விட்டது என்றல்லவா நினைக்க வேண்டியிருக்கு? என்று நடுத்தெரு நாராயணன் நையாண்டியில் இறங்கவும், ராமலிங்கம் பேசாமல் நடந்து போனார். நாவன்னாவின் முகத்தில் கர்வச் சிரிப்பு பூத்தது. ஜோதியை மட்டம் தட்டிவிட்ட பெருமை அவருக்கு. அந்த அடிகள் எப்படிப்பட்டவர் என்பதை நாமும் பார்த்து வைக்கலாமே என்று எண்ணினார், போனார். அம்பலவாண பிள்ளைக்கு ஆண்டவனிடம் பக்தி அதிகமா; இறைவனிடம் பக்தி காட்டும் அடியார்களிடம் பக்தி அதிகமா என்று தீர்மானிப்பது சிரமம். ஆண்டவனிடம் பக்தி முற்றிப்போனதால்தான், அவன் பெயர் சொல்லிவருகிற மெய்யடியார்களுக்கும் பொய்யடியார்களுக்கும் தாராளமாக அள்ளி வழங்கி அன்பு காட்டி உபசரிக்கிறார் என்று சிலர் சொல்வர். உண்மை எதுவாக இருப்பினும் சரியே. அவரது பண்பை முதலாக்கி, சுயலாபம் பெற்று மகிழ்ந்த பண்டாரம். பரதேசி பக்தபரம்பரை பெரியதுதான். அம்பலம் பிள்ளையிடம் சொத்து இருந்தது. பூர்வீகச் சொத்து, ஏதோ கொஞ்சம் தான். அவராக வெட்டி முறித்து வேர்வை சிந்திச் சேர்த்தது கொஞ்சம்கூட இல்லை.