பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{555Zಶ್ತ] 哆 146 தவறுதலாக எண்ணியிருப்பாளோ என்னவோ!' என்று அவன் நினைத்தான். இதற்குள் கூட்டம் கலைந்துவிட்டது. அவனும் புறப்படுவதற்குத் தயாரானான். அவள் யாரோ! அவளைப் பற்றி நான் ஏன் வீணாக எண்ணிக்கொண்டிருக்க வேண்டும்? இனிமேல் நான் அவளை எங்காவது பார்க்கப் போகிறேனா என்ன? என்றும் நினைத்துக் கொண்டான். பாலகிருஷ்ணன் இவ்வாறு சுலபமாக முடிவு கட்டிவிட விரும்பினாலும், அவன் மனம் சும்மா இருந்துவிடவில்லை. சந்தர்ப்பங்களும் அவனைக் கொண்டு இனிய விளையாட்டுக்கள் விளையாட ஆசைப்பட்டன போலும்! அதே தினத்தில் சில மணி நேரத்துக்குப் பிறகு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பாலகிருஷ்ணன் ரயில் நிலையத்தில் காத்திருந்தான். பிளாட்பாரத்தில் ஒரு பெஞ் சில் தனியாக உட்கார்ந்திருந்தான் அவன். வழக்கம்போல் ஏதோ சிந்தனையில் லயித்திருந்தான். அதனால் அங்கே சற்று தூரத்தில் நின்று அவனைச் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த இரண்டு பெண்களை அவன் கவனிக்கவில்லை. திடீரென்று மலரின் மணமும், இதர பெண் வாடைகளும், வளை ஒலியும் தனக்கு மிக அருகாமையில் சூழ்ந்து விட்டதாக உணரவும்தான் அவன் தலைநிமிர்ந்து பார்த்தான். திகைப்புற்றான். அங்கே அவள் வந்து நின்றாள். ஆமாம். அவனிடம் கையெழுத்து வாங்கிய அதே பெண்தான். கூட ஒரு தோழியையும் அழைத்து வந்திருந்தாள் அவள். எவளை அவன் மீண்டும் இனி பார்க்கப் போவதில்லை என்று கருதினானோ அவளே அவனைத் தேடி வந்து முன்னால் நின்றது அவனுக்கு அதிசயமாகத்தான் தோன்றியது. அவளாகவே வலிய வந்து,வம்பளப்பதுபோல்