பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 & வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | அவன் சிரித்து விட்டான் 'இதென்ன பித்து : உங்களுக்கு என் கையெழுத்து எத்தனைதான் வேண்டுமோ, தெரியவில்லையே! என்றான். அவள் ஒன்றும் பேசாது, தனது கைப்பையைத் திறந்து, புதிய புத்தகம் ஒன்றை வெளியே எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவன் ஆச்சர்யம் அடைந்தான். அவன் எழுதிய புத்தகம்தான் அது

டயில் பார்த்த உடனேயே நீங்கள் விலை கொடுத்து

வாங்கி விட்டீர்களாக்கும்? என்று கேட்டான் அவன். 'ஊம்ம்' என்று ஒய்யாரமாகவும் பெருமையோடும் தலை அசைத்தாள் அவள். 'இதில் நான் எதற்காகக் கையெழுத்து போடுவதாம்? 'சும்மா ஏதாவது எழுதி, கையெழுத்துப் போடுங்கள். ஸ்ார்!’ என்றாள் அவள். அந்தப் பெண் அவ்விதம் சொன்ன தோரணையும், உச்சரித்த விதமும் வேடிக்கையாகத் தோன்றவே அவன் சிரித்து விட்டான். அவளும் அவன்கூடச் சேர்ந்து சிரித்தாள். இந்தப் புத்தகத்தின் ஆசிரியரை எனக்குத் தெரியும் என்றால் அது ஒரு பெருமைதானே ? உங்கள் கையெழுத்தை எனது சிநேகிதிகளிடம் காட்டி நான் பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமே!’ என்று அவள் சொன்னாள், களங்கமற்ற சிறுமி போல்தான் பேசினாள் அவள். பாலகிருஷ்ணன் அவளிடமிருந்து பெற்ற புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தான். அதில் அவள் தன்னுடைய பெயரை எழுதியிருக்கவில்லை. அது அவனுக்கு ஏமாற்றமாகத் தானிருந்தது. 'நான் உங்கள் பெயரை கேட்கலாமோ? என்றான் அவன்.