பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்து * 154 ஒ. தாராளமாக!' என்று சொன்ன அவள் பதிலில் குறும்புத்தனம்தான் தொனித்தது. அவள் கண்களிலே அது தனி ஒளியாக மினுமினுத்தது. அவள் தன் பெயரைச் சொல்லு வாள் என எதிர்பார்த்து ஏமாந்த அவன், நீங்கள் இன்னும் சொல்லவில்லையே! என்று சுட்டிக்காட்டினான். மனக் குறை தொனித்தது அவன் குரலிலே. 'நீங்கள் இன்னும் கேட்கவில்லையே! என்று கூறிவிட்டுச் சிரித்தாள் அவள். விளையாட விரும்புகிற குறும்புக்காரி தான் இவள் என்று அவன் மனம் எடை போட்டது. அவள் சொன்னாள் : முதலிலேயே எனக்குப் புரிந்து விட்டது ஸார். இருந்தாலும் வெறுமனே பேசினேன். உன் பெயர் என்ன என்று நீங்கள் ஏன் நேரடியாகக் கேட்கக் கூடாது? ஆங்கிலத்தில் நினைத்துத் தமிழில் பேசுகிறவர் களைப் போல நீங்களும், நான் உங்கள் பெயரைக் கேட்லாமோ? என்று ஏன் விசாரிக்க வேண்டும்? இதை நீட்டி நீட்டிச் சொல்லிவிட்டு அவள் கலகலவெனச் சிரித்தாள். - அவளிடம் எரிந்து விழுவதா, கண்டிப்பான உபதேசம் பேசுவதா-என்ன செய்யலாம் என்றே அவனுக்குப் புரியவில்லை, எனது கதைகளில்கூட எதிர்ப்பட்டிராத விசேஷமான பிரகிருதியாக இருக்கிறாளே இவள் : என்றுதான் எண்ண முடிந்தது அவனால், : அவன் மெளனத்தைக் கண்டு அஞ்சியவள்போல் அவள் தனது சிரிப்பைப் பதுக்கிவிட்டு, ஸார்வாளுக்குக் கோபம் என்று தெரிகிறது!’ என்று மென் குரலில் சொன்னாள். அவன் வாய் திறவாமலே இருந்தான்.