பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఉఫీ, g - סי - i57 & வல்விக்கண்ணனின் மணியான கதைகள் தேவகி அதற்குப் பிறகு பல தடவைகள் பாலகிருஷ்ணனை சந்திக்க நேர்ந்தது. சாதுரியமாக சம்பாவிக்கத் தெரிந்த பெண் என்பதை அவள் வன்வொரு தடவையும் நிரூபித்து வந்தாள். 'எனக்கு இப்படி ஒரு சிநேகிதி இருந்தால் நல்லது என்று நான் எவ்வளவோ தடவைகள் எண்ணியது உண்டு. அத்தக் குறை தேவகியின் வருகையால் நீங்கிவிட்டது என்று அவன் மகிழ்வதும் சாத்தியமாயிற்று. சாதுரியமாகப் பேசத் தெரிந்த பெண் தேவகி. சாமர்த்தியமாகவும் செயல் புரிய அறிந்தவள்தான் என்பதை உணர்த்தத் தவறினாள் இல்லை. உரிய முறைப்படி நடந்து, குமாரி தேவகி யூரீமதி பாலகிருஷ்ணனாகப் பரிணாமம் பெற்று விட்டாள். அதில் அவளுக்கு எவ்வளவோ பெருமை! அவனுக்கு வருத்தம் என்று சொல்லிவிட முடியுமா என்ன? அவனுடைய வாழ்க்கைப் பாதையில் அவள் அநாவசியமாகக் குறுக்கிட விரும்பாமல், அவனோடு சேர்ந்து பிரயாணம் செய்வதற்குத் துணிந்து விட்டாளே அவள்! அதன் பிறகு அவன் ஏன் வருத்தப்பட போகிறான்? தேவகி அவனுடைய துணைவியாக மாறியதும் என்ன செய்தாள் தெரியுமா? அவள் மேஜை முன் உட்கார்ந்து என்னவோ எழுதி எழுதிப் பழகிக் கொண்டிருந்தாள். அப்படி அவள் என்ன தான் எழுதுகிறாள் என்று கவனிக்கும் ஆசையோடு பாலகிருஷ்ணன் மெதுவாக அவள் பின்னால் போய் நின்று எட்டிப் பார்த்தான். அவள் செய்கை அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. சிரிக்கவும் துண்டியது. அவன் சிரித்து விட்டான். தேவகி பாலகிருஷ்ணன் தேவகி பாலகிருஷ்ணன் என்று பல ரக எழுத்துக்களில் கையெழுத்திட்டு மகிழ்ந்து போனாள் அவன். -