பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10, வள்ளலார் குடியிருப்பு, புதுத் தெரு, லாயிட்ஸ் ரோடு, சென்னை-600 005. நாள் : 1-11-2002 வல்லிக்கண்ணன் மனித மனம் ஒரு அற்புதம், அதிசயத் தன்மைகள் கொண்டது அது. மனம் ஒரு புதிர். அதன் தன்மைகளையும் செயல்பாடுகளையும் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அது மர்மங்கள் நிறைந்தது. அதனாலேயே மனசை இருள் குகை என்று உருவகப்படுத்தியிருக் கிறார்கள். மனக்குரங்கு என்றும், மனப்பேய் எனவும், மாயங்கள் புரியக் கூடிய குறளி என்றும், இன்னும் பலவாறாகவும் கற்பித்திருக்கிறார்கள். மனம் மனிதரை ஆட்டிப்படைக்கிறது. ஒருவர் மனம் போல் இன்னொருவருக்கு அமைந்திருப்பதில்லை. ஒருவருடைய மனமே எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி செயல்புரிவதில்லை. மனம் மாறும் தன்மை உடையது, காலமும் சூழ்நிலையும், மற்றவர்களின் உறவும் தொடர்பும், மற்றும் பலவும் மனசை வெகுவாக பாதிக்கிறது. அதன் தன்மைகளும் போக்குகளும் மனிதர்களது செயல்களையும் குணங்களையும் வாழ்க்கையையும் பெரிதும் பாதிக்கிறது. மனமும் உணர்வுகளும் மனிதரை எவ்வாறெல்லாமோ இயக்கிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் சிக்கல்களையும் சோதனைகளையும், துன்பங்களையும் இன்பங்களையும், சுவா ரசியமான நிகழ்வுகளையும் அவை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கைச் சுழல்களிலும் சிக்கல்களிலும் அகப்பட்டுக் கொள்ளாது விலகி நின்று வேடிக்கையாக அனைத்தையும் கவனிப்பவர்களுக்கு. எல்லாம் ரசிக்க வேண்டிய கதைகளாகவும் நாடகங்களாகவும் தோன்றுகின்றன. அவற்றை கவனிக்கிற மனம் கற்பனை மெருகு பூசி கதைகளுக்கு நயமும் சுவையும் சேர்க்கின்றன.