பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ر سه-. * * - — 7 - ವಾಣಿàಕರಾಗಿ மணியான கதைகள் தனித்தன்மையோடும் இனிய நயங்களோடும் கூறுகின்றன. உலகம் பலவிதம். ஆண்கள் பெண்கள் ரகம் ரகம். அவர்கள் பேசிப் பழகி உறவு வளர்க்கும் முறைகளும் விதம் விதம்! தங்கள் உள்ளத்து உணர்வுகளை பேச்சின் மூலம் வெளிப்படுத்தத் தயக்கம் காட்டி நடப்பவர்கள், கண்களால் மட்டும் பேசி மகிழ்கிறவர்கள், ஆண்களிலும் பெண்களிலும் உளர். பேசவில்லை. அதுபற்றிய நடைச்சித்திரம். தானே முன்வந்து உதவி, தோழிகளோடு வாயாடி வம்பளந்து பரிகசித்துச் சிரித்து உள்ளத்தில் அன்பு உணர்வு வளர்க்கும் ரகத்தினரை காதலுக்குமுண்டோ கடன்' என்ற கதையில் சந்திக்கலாம். சுதந்திர தாகம், நல்ல மாறுதல், கையெழுத்து ஆகிய கதைகளும் புதுமைப்போக்கும் துணிச்சல் சுபாவமும் கொண்ட யுவதிகளையும் அவர்களது கவனிப்பைப் பெறுகிற யுவர்களையும் அறிமுகப்படுத்துகின்றன, சுவாரசியமான நிகழ்வுகள் மூலம். 'சண்டைக்கோழி வித்தியாசமான காதல் கதை, கிராமத்து வாயாடிப் பெண் ஒருத்தியின் செயல்துணிவையும் சாமாத்தியத்தையும் அது வெளிப்படுத்துகிறது. சண்டையிடும் சேவலின் இயல்பு ஒன்றும் இந்தக் கதையில் தலைகாட்டுகிறது. ரசனைக்கு விருந்தாகும் இனிய கதைகள் இவை. இவற்றை தொகுத்து அழகிய முறையில் வெளியிடும் உமா மகேஸ்வரி பதிப்பகத்துக்கு என் நன்றி உரியது. வல்லிக்கண்ணன் 效 ప్రోy Cషా