பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*3 வல்லிக்கண்ணன்

பார்க்கப் பார்க்கத் திகட்டாத புதுமைகள், இனிமைகள் இவை எல்லாம். இவற்றை காணமுடிந்திருப்பதே பெரும்பேறு அல்லவா என்று மகிழ்ந்துபோகிறது மனசு.

அன்பு

భ, డి.

அன்பு சகோதர,

வணக்கம் தலம் தானே?

சனி, ஞாயிறு தொடர் மழைக்குப் பிறகு, திங்கள் அன்று வெயில் வந்தது. அன்று வெயில் ரொம்ட அழகாக இருந்ததாகத் தோன்றியது. மரங்களும் வானமும் புதிய வசீகரத்துடன் சிரித்தன. அவை எல்லாமே - கவிதைகளாகத் தோன்றின.

கவிதை பற்றிப் பலரும் பெரிதாக எழுதுவது சகஜமாகிவிட்டது. என்றாலும், கவிதை என்பது என்ன என்று இதுவரை எவரும் தெளிவாகச் சொல்லிவிடவில்லை. பலப்பல கூறிவிட்டு, "கவிதை கவிதையாக இருக்க வேண்டும்" என்று ஏதோ மகத்தான உண்மையை விளக்குவது போல் எழுதிவைக்கிறார்கள்-சாதாரன வாசகனுக்கு கவிதை என்பது என்ன என்று தெளிவுபடுத்த முடியாத அறிவாளிகள்.

ஆகவே, "கவிதை” என்பது விளக்கப்பட முடியாத ஒன்று என்றாகிறது. பயிற்சியால், தேர்ச்சியால், அனுபவத்தால், ஈடுபாட்டால், உள்ளுணர்வால் உணரப்பட வேண்டிய ஒரு உன்னதம் என்றாகிறது. "அழகு" மாதிரி,

சிலருடைய வாழ்க்கையே கவிதையாக அமைந்து விடுவதும் உண்டு.

அன்பு

©J. ö. .

அன்பு சகோதர,

வணக்கம்.

நீங்கள் 229.89ல் கோவைக்கு என் பெயருக்கு அனுப்பிய கடிதம் நேற்று (310.89) தான் இங்கே வந்து சேர்ந்தது. .

விசாரிப்புகளுக்காக நன்றி.