பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i வல்லிக்கண்ணன்

வந்து கொண்டேயிருக்கின்றன.

திரு.வி.க. நூற்றாண்டு, பாரதி நூற்றாண்டு - இவை 1982ல் கிடைத்த வாய்ப்புகள்,

1983லும் ஏதாவது எதிர்ப்படாமலா போகும்!

சென்னை நகரை பொறத்தவரை, 1982 மோசமான வருடம் தான். தண்ணிர் தட்டுப்பாடும் சிரமங்களும் வளர்ந்தன. மழை காலம் என்று சொல்லப்படும் மாதங்களிலே கூட நல்ல படியாக மழை பெய்யவில்லை. ஆகவே, பயங்கரமான வறட்சி வருகின்ற கோடையில் சென்னையை ஆட்கொள்ளக் காத்திருக்கிறது. தண்ணிர் பஞ்சத்துடன், கரண்ட் பற்றாக்குறையும் நகர வாழ்க்கையை மோசமானதாக ஆக்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.

விழாக்கள், தனிப்பட்ட அமைப்புகளின் மாநாடுகள், கருத்தரங்குகள், தனிநபர்களைப் பாராட்டுவது என்றெல்லாம் பணம் தண்ணிர் மாதிரி தாராளமாகச் செலவு செய்யப்படும் காரியங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆரவாரமாக வளர்கின்றன.

ஒருபுறம், வளர்கின்ற தரித்திர நிலைமைகள். அதே சமயம், இன்னொரு புறம் வீனத்தன-வெத்துவேட்டு-மத்தாப்பூ பகட்டு ஆரவாரங்கள்!

இருவேறு உலகத்து இயற்கை' நேற்று இருந்தவன் இன்று இல்லை என்கிற பெருமையை உடைய இந்த உலகம் தனது பெருமையை சதா வெளிச்சப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் அறிவு கொளுத்தப் பெறுபவர் தொகை தான் அதிகமாக இல்லை.

அன்பு

డj, జి.

டி.டி. திருமலை

F3-6–83 சென்னை.

அன்பு நண்பர் அவர்களுக்கு,

வணக்கம். பேராசிரியர் அ.சி.ரா. நினைவு அறக்கட்டளை அமைப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம் சம்பந்தமான கடிதம் கிடைத்தது.