பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் #$3

-அல்வா வாங்கி சாப்பிடலாம். அடுத்தபடியாக அப்புறம் யோசிக்கலாம் என்று மனம் பேசியது.

சில விஷயங்களை காலமே தீர்மானித்துச் செயலாக்கி விடுகிறது. சில நினைப்புகள், சுயமுயற்சி இல்லாமலே பிறர் துணையினால் எதிர்பாராத விதத்தில் நிறைவேறிவிடுகின்றன.

இப்பவும் அப்படித்தான் ஆச்சு.

திடீரென்று கோமு வந்தாள். அல்வாவும் மிக்ஸ்சரும் வாங்கி வந்தாள்.

அடுத்தபடியாக, ஒரு சுற்றுலா மாதிரி ஒரு வேனில் (Wal) பூரீவில்லிபுத்துர் போய் வருகிற வாய்ப்பு கிடைத்தது. அங்கே கோயில்களுக் கெல்லாம் போக நேரிட்டது. மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று.

-இதெல்லாம் விசேஷமானவை தானே! இந்த க் கொண்டாட்டமே போதும்! என்று மனம் சந்தோஷப்பட்டுக் கொண்டது.

மலைகளில் இரவு நேரத்தில் தீ எரிவது சில சமயம் பார்வையில்படும்.

காற்றுக் காலத்தில் இப்படி தீப்பிடித்து எரிவது சகஜமாகவும் நிறையவும் இருக்கும். காற்றில் மூங்கில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி, தீப்பிடித்து எரியும். அது பக்கத்து மரங்களுக்கும் தாவி விடும்; காற்று வேகத்தில் நெடுகப் பரவும் என்று முன்பு பொதுவாகச் சொல்வார்கள்.

சாரல் காலம், குளிர் அதிகம் இருக்கும். அதனாலே மலைப் பளிங்கனுக (மலை மீது வசிக்கிற பூர்வகுடிகள்) தீ வைப்பானுக, குளிருக்குப் பாதுகாப்பாக, காற்று வேகத்திலே அது மரங்களுக்குத் தாவி, எங்கும் பரவி விடும். இப்படி 40-50 வருடங்களுக்கு முன் ஜனங்கள் பேசிக் கொள்வது வழக்கமாக இருந்தது.

பிறகு Forest அதிகாரிகளே, கரி சேகரிப்பதற்காகவும், மண்டி வளரும் புல்பூண்டுகள் செடிகள் புதர்களை அழிப்பதற்காகவும் தீ வைப்பார்கள்; அது பற்றி எரிந்து பெரும் தீயாக வளர்ந்து பரவி விடுகிறது என்று சொல்லலானார்கள் உண்மையான காரணம் என்னவோ! மலை மேலே தீ அடிக்கடி, தொடர்ந்து, எரிவது நடந்து கொண்டே இருக்கிறது.

15-20 வருடங்களுக்கு முன்னாலே, ராஜவல்லிபுரம் வீட்டின் வாசலில் நின்றாலே, மேற்குத் தொடர்ச்சி மலைமீது தீ எரிவது