பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2姆 வல்லிக்கண்ணன்

வண்ணதாசன்

சென்னை 23-7-83 அன்பு மிக்க கல்யாணி, வணக்கம். உங்கள் 8-1-83 கடிதம் (கிடைத்த தேதி 11-1-83) அருமையானது. இனியது. சுவை மிகுந்தது. கலைநயம் உடையது. இலக்கியத் தரமானது. வாழ்க உங்கள் மனோபாவம்! வளர்க உங்கள் எழுத்தாற்றல்:

பொங்கல் வந்தது. விடுமுறை நாட்கள். ஊரிலே கல்யாணம். நீங்கள் போகலாம் - வரலாம் என்பதால், நான் கடிதம் எழுதுவதை தாமதப்படுத்தி வந்தேன்.

டிசம்பர் 26 முதல் ஜனவரி 6 முடிய எனக்கு மிக மனோகர நாட்கள். புதிய அனுபவங்கள். மாறுபட்ட வாழ்க்கை முறைகள். திக்குமுக்காட வேண்டிய அளவுக்கு அன்பு உபசரணைகள்.

நெய்வேலியில் ஒரு நண்பர் - ராமலிங்கம். (23 வயது). டி.எம்.ஈ, என்.எல்.சியில் என்ஜினிர் வேலை. நெய்வேலியை பார்க்கலாமே, வருக என்றார். போனேன். திருமலையும் உடன் வந்தார். பஸ் பயணம். சென்னையிலிருந்து 5 மணிநேரப் பிரயாணம்.

1955க்கு முன்னே முந்திரிக்காடாகவும் சிறு சிறு கிராமங்களாகவும் இருந்த பிரதேசம் அழித்துத் திருத்தி மாற்றப்பட்டு, சுரங்கப்பகுதியாகவும் புறநகரமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அமைதி, அழகு, இனிமை, புதுமை நிறைந்த குட்டிநகரம் - 'டவுன்ஷிப் நெய்வேலி, கண்ணுக்கு இனிமை தருவது. மனசுக்கு இதம் தருவது. நெருக்கடி இல்லை. பரபரப்பு இல்லை. டவுண் பஸ் உண்டு. ரொம்ப நேரத்துக்கு ஒரு தடவைதான் ஒடும். துரங்கள் அதிகம். எனவே, சைக்கிள்கள் சகஜமாக உடயோகிக்கப்படுகின்றன - சிறுமியர், பெண்கள், ஒல்லியர், தடிச்சிகள் - சகல ரகத்தினராலும்.

கேரளா மாதிரி, வீட்டுக்கு வீடு தோட்டங்கள், முருங்கை, பலா, வாழை, எலுமிச்சை, நெல்லி, மற்றும் பூச்செடி வகைகள். வளமான மண். ஆகவே, காய்ப்பு அதிகம். பூப்பும் மிகுதி. நிலம் சுற்றி வளைக்கப்பட்ட காலத்தில் ஏராள இடம் இருந்தது. ஒவ்வொரு வீட்டுக்கும் மாடி கிடையாது) நிறையத் தோட்ட இடம் இருந்தது. குடி இருப்பவர் மிகக் குறைந்த வாடகை) இஷ்டம் போல் மரங்கள், செடிகள், காய்கறிப் பயிர்கள் நட்டு அனுபவிக்கலாம். வளர்த்தார்கள். இருக்கிறவரை அனுபவிக்கலாம். அனுபவித்தார்கள். அனுபவிக் கிறார்கள். காலி பண்ணிப் போகிற போது, அப்படியே விட்டுவிட்டுப் போகவேண்டும் என்பது விதி. மண் மத்திய அரசுக்கச் சொந்தம்.