பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

空亨 வல்லிக்கண்ணன்

நான் தினசரி ஒரு புதுப்புத்தகம் படிக்கிறேன். அப்படியும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இன்னும் அதிகம் சேர்ந்೫r767 அந்தி வேகத்துக்கு புத்தகங்கள் வருகின்றன. எனக்கு வந்து Genu GL இவ்வளவு புத்தகச் சந்தைக்கு வந்து கொண்டிருப்பவை எவ்வளவெவ்வளவோ!

நண்பர்களின் கதைத் தொகுப்புக்கள் தொடர்ந்து வருகின்றன. சுப்ரபாரதிமணியன் கதைகள் நவீனம் (அன்னம்) வந்தது. இப்ப நாதம் திருப்பத்துரர் பதிப்பகம் ஒன்று) வந்துள்ளது. பாவண்ணன் புதிய கதைத் தொகுதி 'நேற்று வாழ்ந்தவர்கள் (காவ்யா), சங்கரநாராயணன் கதைகள் சராசரி இந்தியன் (அட்சரா), செ. யோகநாதன் ஒரு சொல்-இப்படிப் பலபல.

யோகநாதன் வேகமாகவே எழுதுகிறாா. தொடர்ந்து புதிய வெளியீடுகள் வந்தவாறு இருக்கின்றன. நாவல் தனியாக ஒருத்தி'; குறுநாவல் தொகுப்பு காற்றின் சுழிப்பு: இன்னொரு நாவல் வனமலர் கிட்டி என்ற நாவலுக்கு இரண்டாம் பாகம் மாதிரி) வந்துள்ளன.

தமிழ் வாசகர்கள் இவற்றை எல்லாம் படித்துப் பார்க்கிறார்களா? சந்தேகமாகத்தான் இருக்கிறது.

அன்பு

@. లే.

சென்னை

j-4-93

அன்புமிக்க கல்யாண்ஜி,

வணக்கம். உங்கள் 23-3-93 கடிதம், உங்களது எல்லா எழுத்துக்களையும்போல, இனிமையாக இருந்தது. சந்தோஷம்.

ஒரு விஷயம் தெளிவு படுத்தவேண்டும். லாயிட்ஸ் ரோடில் எங்கள் பகுதியில் லாரிலாரியாக வந்து, பாதை ஒரம் நெடுகிலும் 'மலைமலையாக குவிக்கப்பட்டிருப்பது கிருணிப்பழம் இல்லை. 'தர்பூஸ் என்று சொல்லப்படுகிற தர்பூசணி - வாட்டர் மெலன். பச்சை-வெளிர் மஞ்சள் பட்டைகளோடு-வெளிப்புறமும், வெட்டினால் பளீரென்று பிங்க் நிறத்தில் குளுமையாய் சிரிக்கும் சதைப்பகுதியும், பெரிய கறுப்பு விதைகளும், தடியங்காய் (சாம்பல் பூசணி தன்மையில் வெள்ளைப் பகுதியும் கொண்ட காய். நீர்ச்சத்து