பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 வல்லிக்கண்ணன்

உலகம்மை நல்ல கேரக்டர். அவளுடைய வளர்ச்சி திறமையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. முடிவில் அவள் மனிதாபிமானம் நிறைந்த சேரிமக்களுடன் சேர்ந்து கொள்வது இயல்பாக யதார்த்தத் தன்மையோடு - எழுதப்பட்டுள்ளது.

குறை என்று சொல்லவேண்டுமானால், உலகம்மை, கணக்குப் பிள்ளை வீட்டின் முன் நின்று பேசுவது ஓவர் ஆகப்படுகிறது. அவள் திமிர் பிடித்த பொம்பிளை என்று எண்ணத் துண்டுகிறது. ரொம்பவும் இடைஞ்சல்படுத்தப்பட்ட - தொல்லைகளுக்கு ஆட்பட்ட ஒரு நபரின் ஆத்திரம் இப்படிப் பேசத் துண்டியது என்று சமாதானம் கூறிக் கொள்ளலாம். வட்டார வழக்குகளை - பேச்சுத் தமிழை, சொலவடை'களையும் பழமொழிகளையும், விசேஷமான பிரயோகங்களையும் - திறமையாகக் கையாண்டிருக்கிறீர்கள். உள்ளார்ந்த ஒரு கிண்டல் (நக்கல் கேலி) உங்கள் எழுத்துக்களில் தொனிக்கிறது. இது சுவை சேர்க்கிறது.

எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்,

அன்பு

ராஜவல்லிபுரம். 8-11-79

அன்பு மிக்க நண்பர் அவர்களுக்கு,

வணக்கம்.

அக்31ம் தேதி இங்கு வந்து சேர்ந்தேன். நலமாக இருக்கிறேன். நீங்களும் நலம் தானே?

இப்போது சில தினங்களாக இங்கு நல்ல மழை. இன்று தான் விட்டிருக்கிறது. தாமிரவர்ணியில் பெரும் வெள்ளம் ஒடுகிறது.

- 'ஊருக்குள் ஒரு புரட்சி தொடர்கதை - 12 பகுதிகள் - படித்துவிட்டேன். சந்தோஷம்.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எடுத்துக்கொண்ட விஷயத்தை, தக்கபடி விவரித்திருக்கிறீர்கள். வசதி படைத்தவர்கள் சலுகைகள் 7bುಟ್ತರ್ಿ பலவற்றையும் பயன்படுத்தி மேலும் மேலும் வசதிகளை பெருக்கிக் கொண்டு கொழுப்பேறி வருவதை வறுமைப் பட்டவர்களை சுரண்டிக் கொழுப்பதை சந்தர்ப்பவாதிகளும் சுயநல அரசுப்பணியாளர்களும் பிறரும் அவர்களுடைய ஏவல் நாய்களாகத்