பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வல்லிக்கண்ணன்

ராஜவல்லிபுரம் ஊர் நிலவரம் பற்றி விசாரித்திருந்தீர்கள். ராஜவல்லிபுரம் என்ற அழகான பெயரைக் கொண்டிருந்தாலும், ராசல்யாரம், ராசலியவரம், ராசல்லிபுரம், லாயில் யாபுரம், லாயிலாவரம் என்றெல்லாம் பலராலும் பலவிதமாகவும் குறிப்பிடப்படுகிற இந்த ஊர் தலைமுறை தலைமுறையாக லா-யிலாபுரம் (சட்டம் இல்லாத ஊர் ஆகவும் இருந்து வருகிறது. தடலடிக்காரர்கள், குடித்துவிட்டு முரட்டுத்தனமாகச் செயல்புரிகிறவர்கள் இஷ்டம்போல் நடக்க உதவுகிற இடமாக இருக்கிறது.

ஒருவன் குடித்துவிட்டு, பஸ் டிரைவரை அடித்து விட்டான். அதனால் பஸ் போக்குவரத்து நின்றது. ஏழுநாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கி, பஸ்கள் ஓடுகின்றன.

இந்த ஊரிலும் சுற்றுப்பக்க ஊர்களிலும் இது அவ்வப்போது திகழ்கிற நிகழ்ச்சி ஆகிவிட்டது.

தெருக்குழாயில் ஒருத்திக்கு தண்ணிர்விட இதர பெண்கள் மறுத்தார்களாம். அவள் புருஷன் ஆத்திரம் அடைந்து, தெருக்குழாய்கள் பலவற்றையும் தகர்த்து எறிந்து போட்டான். தரைக்குள் இருக்கிற பைப்புகளையும்உடைத்து சேதப்படுத்தினான். 'எனக்கும் என் பெண்டாட்டிக்கும் இல்லாத தண்ணிர் ஊர்காரர்களுக்கு வேண்டியதில்லை என்பது அவன் வாதம் 3 மாதங்களாக தண்ணீர் ரோடில் ஒடிக்கொண்டிருக்கிறது வீணாக. தண்ணிர் பிடிக்கிறவர்கள் ரப்பர் டியூபை உடைந்த குழாயில் பொருத்தி, குடங்களில் பிடிக்கிறார்கள். குழாய்களை சீர்படுத்தவோ, தெருவை அசிங்கமாக்கி ஓடுகிற தண்ணிரை கட்டுப்படுத்தவோ ஒள்விதமான முயற்சியும் நடைபெறவில்லை. சில சாம்பிள்கள்.

தான் வழக்கம்போல் படிப்பு-எழுத்து வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறேன். இங்கிருந்து செய்ய வேண்டிய வேலைகள் பல இருக்கின்றன. ஆகவே, நவம்பரிலும், நான் இங்கு தான் இருப்பேன். நீங்கள் அங்கே வீட்டுக்குப் போய் பார்த்ததை அறிய சந்தோஷம். அண்ணாவும், நீங்கள் வந்தது குறித்து எழுதியிருந்தார்.

திட்டம் இதழில் தெ.பொ.மீ பற்றிய கட்டுரையில் என் பெயர் விடுபட்டுப் போனது குறித்து நீங்கள் எழுதிய ஆபீஸ் கடிதம் முன்பே கிடைத்தது. நன்றி.

நலம். நாடுவதும் அதுவே.

அன்பு