பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 35

படித்தேன். நல்லகுணசித்திரப் படைப்பு. பொம்பிளைகளை கேலி செய்து பொழுதுபோக்கும் நாலு வீணர்களின் போக்கு அப்பாவியான ஒருவனை ஞானவானாக மாற்றி விடுவதை அழகாகச் சித்திரித்திரக்கிறீர்கள். விகடன் பொன்விழா மலரில், சிநேகித ஜாதி படித்தேன். அருமையான கதை. நல்ல கருத்து. ஜாதியின் பெயரை சொல்லிக் கொண்டே, பணத்தி மிருடன் மற்றவர்களை சுயஜாதியினரையே - அவமதிக்கும் கொழுப்பர்களுக்கு நல்ல சூடு கொடுத்திருக்கிறீர்கள். நயமான சிந்தனைகள் பல இக்கதைக்கு ஜீவன் ஊட்டுகின்றன.

பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி, சுவையான அனுபவங்கள் பெற்று வருவது பாராட்டுதலுக்கு உரியது.

நான் அறுபதாண்டு நிறைவுக்குப் பாராட்டு விழா எதுவும் தேவையில்லை என்று கருதினாலும், நண்பர்கள் சும்மாவிடவில்லை.

11-ம் தேதி இரவு திருநெல்வேலி பாங்கு ஊழியர்கள் யூனியனை சேர்ந்த பர்வானா இளைஞர் மன்றம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. தமிழில் சிறுகதைகள் பற்றி ஒரு மணிநேரம் பேசினேன்.

நாளை (23 ஞாயிறு) முற்பகல் 10 முதல் முடிய திருநெல்வேலி ஜங்ஷனில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி, நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கூட்டுகிறது. வல்லிக்கண்ணன் படைப்புகள் பற்றி 4 பேர் பேசுவர். நான் முடிவில் பேசவேண்டும். 2 மணிக்கு ஒட்டப்பிடாரம் போகவேண்டும். அங்கே, ஒரு பாராட்டுவிழா. ஏகப்பட்ட பேர் பட்டியல் போட்டிருக்கிறது. யார் யார் வருவார்களோ, தெரியாது.

'திட்டம் இதழ் வந்தது. காரணதுரைக் கண்னன் பற்றி அசோகமித்திரன் நன்றாக எழுதியிருக்கிறார்.

தினமணிக்கதிர் மலரில் பிரசுரமான எனது பெண் கதையை நண்பர்கள் பலரும் ரசித்துப் பாராட்டி எழுதியுள்ளனர். நீங்களும் சுவைத்து மகிழ்ந்ததை அறிய மகிழ்ச்சி.

உலகம் பலவிதம். மனிதர்கள் ரகம்ரகம். அவரவர் மனசுக்குப் பிடித்த வழிகளில் சந்தோஷமாக வாழத்தான் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் சந்தோஷங்கள் எல்லோருக்கும் எப்போதும் சித்திப்பதில்லை. நான் எப்போதும் சந்தோஷமாக இருக்க விரும்பினேன். துணை என்று ஒன்று சேர்ந்தால் அது வினையாகத்தான் அமையும் என்று கருதினேன். எல்லோரும் அப்படி எண்னவேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லைதான்.

அன்பு

ගීෂ්, ෆි.