பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 43

என்ன? மகாகவி பாரதி வாழ்ந்து காட்டிய, வாழ்க்கை நெறிகள் என எடுத்துக் கூறிய, நல்ல கருத்துக்களை கடைப்பிடிப்பவர்கள் நாட்டிலே பெருகினால் நல்லது.

அன்பு

డ, ఢీ, :

சென்னை-14

25-3-85

பிரிய நண்ப,

வணக்கம். நீங்கள் அன்புடன் அனுப்பிவைத்த ஆங்கிலக் கட்டுரை கிடைத்தது. படித்து ரசித்தேன்.

நீங்கள் பூரீவைகுண்டத்திலேயே இருப்பதாக எண்ணியிருந்தேன். இக் கட்டுரை மூலம் உங்கள் விலாச மாறுதல் அறிந்தேன். இப்போது துரத்துக்குடிக் கல்லூரியில் பணி புரிகிறீர்களா?

பாரதி கவிதைகளிலிருந்து பாரதியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஆய்வு செய்து முடிவுகட்டி, நல்லதொரு ஆங்கிலக் கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

இதை தமிழில் எழுதியிருந்தால், சொல்லப்பட்டுள்ள விஷயங்களில் புதுமை இராது. ஏனெனில் இதுபோன்ற கருத்துக்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

'பாரதி-சில யதார்த்தப் பார்வைகள் என்றொரு புத்தகம். புதுக்கோட்டைக் கல்லூரியில் பணிபுரியும் நாலு பேர் எழுதிய கட்டுரைகளைக் கொண்டது. அவற்றில் ஒரு கட்டுரை. பாரதியின் கண்ணம்மா பற்றியது தான். கண்ணம்மா காதல் பாடல்கள் உயிருடனிருந்த ஒரு பெண்ணை நினைத்து ஏங்கிப் பாடப்பட்டவை தான் என்றும், கண்ணனை எண்ணிப் பாடிய ஆத்மீகக்காதல் கவிதைகள் இல்லை என்றும் மங்களா என்பவர் நிரூபிக்க முயன்றிருக்கிறார்.

புலன் இன்ப ரீதியான காதல் பிதற்றல்களே பாரதியின் கண்ணம்மா பாட்டுகள் என்று கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. அவருக்குப் பரிச்சயமான ஒரு பெண்ணை நினைத்துப் பாடிய காதல் பாடல்கள் தான் என்று கருதி அப்படி அவற்றை ரசிப்பவர்கள்