பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 45

துடிப்புகளை தவிப்புகளை, கனவுகளை, ஏக்கங்களை எல்லாம் எவரும் அளவிட்டுவிட இயலாது.

கவிதை அருமையான படைப்பாக இருக்கிறது. ரசிகர்கள் பலவிதம். அவரவர் மனப்பண்புக்கும் ஆற்றலுக்கும் ஏற்றபடி ரசித்து மகிழ்வார்கள்; ஆராய்ச்சி செய்வார்கள்.

அத்தகைய ஆய்வுகளும் திறமையோடும் தயத்தோடும் எழுதப்படுமானால், அவையும் இலக்கியப் பிரியர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்,

The 'Puppy-Love' of Bharati; Kannamma, The Dark"Lady grog, கட்டுரை நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. எனது பாராட்டுக்கள்.

அதை எனக்கு அனுப்பியதற்காக நன்றி.

அன்பு

சென்னை.

  1. ぶ一リーリ認

அன்பு மிக்க நண்ப,

வணக்கம்.

உங்கள் 7-11-88 கடிதம் சந்தோஷம் அளித்தது.

‘புதுமைப்பித்தன் புத்தகத்தைப் படித்து ரசித்ததை அறிய மகிழ்ச்சி.

'கப்சிப் தர்பார் - நாஜி ஜெர்மனியின் ஹிட்லர் வரலாறு: சொ.வி.ந. ராமரத்னம் எழுதியது. இருவரும் தினமணியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அதில் எந்தப் பகுதியை பு.பி எழுதினார் என்பது புத்தகத்தைப் பார்த்தால் தான். சொல்லமுடியும்.

'கப்சிப் தர்பார்'ருக்கு முன்னதாக இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி பற்றி பாசிஸ்ட் ஜடாமுனி என்ற புத்தகத்தை சொ. விருத்தாசலம் பி.ஏ. எழுதினார். இரண்டும் நவயுகப் பிரசுராலய வெளியீடுகள் தான்.

சாகித்திய அகாடமி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வெளியிடும் நூல்களைப் பல இந்திய மொழிகளிலும் பிரசுரிப்பது வழக்கம். புதுடில்லியில் இருப்பவர்கள் முடிவு செய்வார்கள்.