பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கன் 47

எனக்கு புத்தகம் வந்திருக்கும் என்று இரண்டு பேரும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்தார்கள். புத்தகம் வரவில்லை, நான் அதை பார்க்கவில்லை என்று இருவருக்கும் தெரிவித்தேன்.

நேற்று மாலை உங்கள் தம்பி திரு. ராமலிங்கம் அந்த நூலை கொண்டு தந்தார். நன்றி. சந்தோஷம்.

புத்தகம் வெகு அழகாக, வசீகரமாக அமைந்துள்ளது.

இப்போதெல்லாம் தமிழ் புத்தகங்கள் அழகான அட்டைப்படம், வர்ணங்கள், வசீகரத் தோற்றத்துடன் வெளிவருவது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.

முன்னுரையையும் முதல் கட்டுரையையும் படித்தேன்.

அகத்தியர் முதல் அப்புசுவாமிவரை கட்டுரை ஆழ்ந்து அகன்ற நோக்குடன் எழுதப்பட்டிருக்கிறது. மிகநிறைந்த தகவல்கள். உங்கள் இலக்கிய ஈடுபாட்டையும், ஆழ்ந்த படிப்பையும், தகவல்கள் சேகரிக்கும் முயற்சியையும் அந்தக் கட்டுரை நன்கு புலப்படுத்துகிறது. உங்களுடைய திருநெல்வேலிப் பற்றுதலையும். திருநெல்வேலி க்காரர்கள் பற்றி விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன. குமுதம்' சிறுகதைப் போட்டியைக் கூடச் சேர்த்து ரொம்ப அப்-டு-டேட்' ஆக்கியிருக்கிறீர்கள் கட்டுரையை பாராட்டுகிறேன். என்னைப் பற்றி அதிகம் குறிப்பிட்டிருப்பதற்காகவும், துாலை எனக்கும் சமர்ப்பித்துள்ளற்காகவும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். “..

1940-41-2 வருடங்கள் நான் பூணிவைகுண்டத்தில் வசித்தேன். 'சர்க்கார் விவசாய ஆபீஸ் குமாஸ்தாவாக நான் சென்னைக்கு நடந்தே போவது என்று சக்2 மே 25-ம் தேதி அதிகாலையில் துணிச்சலோடு புறப்பட்டது திருநெல்வேலி டவுண், அரசடிப் பாலத் தெரு வீட்டிலிருந்துதான்.

கட்டுரையில் 2 பேர்களை சேர்த்திருக்கலாம் என்று

நினைக்கிறேன். கவிதை ரசனையை வளர்த்த டி.கே.சி போல,

கலைரசனையை (சிற்பங்களை ரசிக்கும் ஆசையை) தொடர்

கட்டுரைகள் மூலம் வளர்த்த தொ.மு. பாஸ்கரத் தொண்டமான்.

இன்னொரு பெயர் மீ.ப. சோமசுந்தரம். இவ்விரண்டு பேர்களையும்

பின் குறிப்பில் டி.கே.சி. பக்தர்கள் கணக்கெடுப்பில்தான்

சேர்த்திருக்கிறீர்கள். கட்டுரையிலேயே இடம் அளித்திருக்கலாம்.

அன்பு

ఢ. ః,