பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கன்னன்

அப்படி இ ன் . த கன் அபிப் பிராயம் உண்டாக வேண்டும்? பர்கள் சந்தித்தால், புதிதாக அறிமுகமானால், ஒருவருக்கொருவர் ங்களைப் பற்றி சொல்லிக் கொள்வது இயல்பான காரியம் தான். புத்தகங்களில் வந்த விஷயங்களால் தெரிந்து ர்கள். உங்களைப் பற்றி நீங்கள் சொல்லித்தானே கொள்ள இயலும்? மனம் விட்டு எழுதியதற்காக

- ஒவ்வொருவருக்கும் எப்படி எப்படியோ அமைந்துவிடுகிறது. எவரும் அவரவர் விருப்பப்படி, மனநிறைவுடன், அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதற்கு குடும்பம், சமூகம், உறவுமுறைகள், இதர தொடர்புகள், நாட்டு நிலைமை, கால

நிலைமைகள் முதலியன உதவுவதாக இல்லை.

ஒருவன் ஒரளவுக்காவது சந்தோஷமாக வாழ விரும்பினால், அதற்காக அவன் இதர பல விஷயங்களை இழக்க வேண்டித்தான் ஏற்படும். உள்ளதை கிடைப்பதை) கொண்டு திருப்தி அடைகிற மனம் அந்த சந்தோஷத்துக்கு வகை செய்யக்கூடும்.

இப்படி சொல்லிவிடுவது கூட எளிது. ஆனால் நடைமுறையில் இதற்கும் எவ்வளவோ சிக்கல்கள், சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். . திரம். சக்தி மிக்க பலவகையான அலைகள் இருக்கின்றன. அவற்றால் தாக்குண்டும், *Հ- நாடு சமாளித்தம், அமுங்கியும் எழுந்தும், தலையை துர்க்கியும், அனுசரித்தும் மனிதர்கள் அல்லாட வேண்டியிருக்கிறது. அவை அனுபவங்கள் ஆகின்றன. அப்படி பலவகையான பல்வேறுபட்ட மனித அனுபவங்களைத் ஆர்வம் உண்டாகிறது. அதற்கு பலரும் வல்கள் முதலியன உதவுகின்றன. கடிதங்கள்

بs_ ,8- & ;88 து:ைஇன்றன.

இதிக

உங்கள் வாழ்க்கையின் சோகங்களை புரிந்துகொள்ளமுடிகிறது. திருமணமாகி, மனைவி, குடும்பம் என்று இருந்தும், துாரா தொலையில் அயல் மனிதர்கள் மத்தியில் தனிநபராய் வாழ நேரிட்டிருக்கிற சோகம் கனமான சுமைதான். எண்ணற்ற பேருக்கு வாழ்க்கையே ஒரு சிலுவையாக அமைந்து விடுகிறது. அந்தச் சிலுவையை சுமந்தே தீரவேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது.

அமைதி வளருங்கள். விரக்தி எண்ணங்களுக்கு இடம் தரக்கூடாது. கவிதை உள்ளம் பெற்றிருப்பது ஒரு நற்பேறு. கவிதைகளை படித்து ரசிக்க முடிவது ஒரு பாக்கியம். நல்ல புத்தகங்களை படிப்பது மனோகரமான சந்தோஷ அனுபவம்.