பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள்

5

5

GFçirç5 ಘ.

32 ع س 3 سم في

அன்பு மிக்க நண்பர், வணக்கம். உங்கள் 22-10-87 கடிதம் அப்பவே கிடைத்துவிட்டது.

எங்கும் நல்ல மழை பெய்து, வறட்சி நீங்கிவிட்டதை அறிந்து மகிழ்கிறேன்.

சென்னையிலும் மழை பெய்தது. பெய்கிறது. ஒன்றிரு நாட்கள் கனத்தமழை. பிறகு தூறல்தான். ஆயினும், ஏரிகள் இருக்கிற பக்கம் மழை பெய்வதில்லை ஆகையால் குடிதண்ணீர் பிரச்னை இன்னும் நீடிக்கிறது.

நான் நலம். அக்டோபர் கடைசி வாரம் நான் ராஜவல்லிபுரம் போக எண்ணியிருப்பதாக முன்பு தெரிவித்தேன். அது நடைபெறுவதில் தடை ஏற்பட்டுவிட்டது.

நவம்பர் இறுதியில் புதுடில்லியில் சாகித்திய அகாடமி, புதுமைப்பித்தன் நினைவாக ஒரு கருத்தரங்கமும் சிறுவிழாவும் ஏற்பாடு செய்கிறது. க.நா.சு. தலைமை. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நா.பா. மற்றும் சிலர் கலந்துகொள்வர். நானும் கலந்துகொண்டு, ஒரு கட்டுரை படிக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்

டில்லி போக வேண்டியிருப்பதால், இப்போது திருநெல்வேலி செல்ல இயலவில்லை. பின்னர் தான் பார்க்கவேண்டும்.

சாகித்திய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசையில் நான் எழுதிக்கொடுத்த புதுமைப் பித்தன் இம்மாதம் வெளிவந்து விடும்.

புதுமைப்பித்தன் கதைகள் 96ஐயும் (மொழிபெயர்ப்புக் கதைகள் கிடையார் ஒரே புத்தகமாக புதுமைப்பித்தன் படைப்புகள் என்று ஐந்தினைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. க.நா.க ஆய்வுரை, ஜெயகாந்தன் அணிந்துரை. பழைய ரா. ரீ. தேசிகன் முன்னுரை ஆகியவற்றுடன் விலை ரூ. 85/. நான் பார்க்கவில்லை.

'தீபம்’ பத்திரிகையில் நான் மாதம் தோறும் தனித் தனிக் கட்டுரை எழுதி வருகிறேன்.

சோலைத்தேனி வெளியீடு (காட்பாடி) முன்பு பிரசுரித்த "எழுத்தாளர்கள் - பத்திரிகைகள் புத்தகம் போல 'வாசகர்களும்விமர்சகர்களும் என்றொரு புத்தகம் எழுதித் தரும்படி கேட்டார்கள். எழுதிக்கொடுத்திருக்கிறேன்.