பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகாப்தமாகவே வாழ்ந்து வரும் வல்லிக்கண்ணனின் ஆரம்ப கால கடிதங்களில் இருந்து காலவாரியான தொகுப்பை கொண்டு வர பெரிதும் முயன்றோம். எவ்வளவு முயன்றும் அவரது ஆரம்பகால கடிதங்கள் கிடைக்கவில்லை. தனது அண்ணனுக்கும் அண்ணன் பிள்ளைகளுக்கும் வ.க எழுதிய கடிதங்கள் இத்தொகுப்புக்கு தனிச்சிறப்பை தரும் விதத்தில் அமைந்துள்ளன. நண்பர் நாகரத்தினம் சேகரித்திருந்த சில அரியகடிதங்களும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே கடிதத் தொகுப்பு வெளிவருவது பெரிதும் தாமதமாகியது. இனியும் காத்திருப்பதை விட இதுவரை கிடைத்த கடிதங்களில் இருந்து ஒரு தொகுப்பை கொண்டு வருவோம் என முடிவெடுத்து இத்தொகுப்பை கொண்டு வந்துள்ளோம். 'வல்லிக்கண்ணனின் முழு பரிணாமத்தையும் காட்டக்கூடிய அவரது மற்றைய கடிதங்களையும் சேகரிப்பதை தொடர்ந்து செய்து வருகிறோம். அத்தகைய கடிதங்களைக் கொண்ட முழு தொகுதி அடுத்ததாக வெளிவரும்.

நெய்வேவி - மு. இராமலிங்கம் 23,酚,安Z