பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్ర{ வல்லிக்கண்ணன்

சென்னை.

39 سم 2 سـ يع அன்பு மிக்க நண்பர், வணக்கம். பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்குப் போவதாக நீங்கள் எழுதிய கடிதம் முன்பு கிடைத்தது. திட்டமிட்டபடி ஊர் போய்விட்டு, உரிய நாளில் விருதுநகர் வந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். .

நீங்களும் னைவியும் நலம் தானே? நான் நலமாக இருக்கிறேன். சிறுபத்திரிகைகள் சங்கம் முதலாம் ஆண்டுவிழா சிவகாசியில் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு நான் வருவேன். 11-ம் தேதியே சிவகாசி வந்துவிடுவேன். நிகழ்ச்சி முடிந்தபின் விருதுநகர் வந்து உங்களை சந்திப்பேன். 13 செவ்வாயன்று வரமுடியும் என எண்ணுகிறேன். . நண்பர் ஜெயபாலனுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். சிவகாசி நிகழ்ச்சிக்கு இடைசெவலிலிருந்து ராஜநாராயணனும் வருவார்.

'காலச்சுவடு 5-வது இதழ் இன்னும் வரவில்லை. இம்மாதம் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

நான் ஜனவரி 15ல் மயிலாடுதுறை போயிருந்தேன். அங்கே தெய்வத் தமிழ் மன்றம், தமிழ்நாவல் விழாவைக் கொண்டாடியது. தமிழ் நாவல்கள் பற்றிப் பேசினேன். பேராசிரியர் எழில்முதல்வன் தலைமை நாஞ்சில் நாடன் நாவல் மிதவை'க்கு விருது வழங்கப்பட்டது. நாஞ்சில்நாடன் பம்பாயிலிருந்து வந்திருந்தார். புதுக்கோட்டை பேராசிரியர் மிதவை பற்றிப் பேசினார்.

சென்னையில் ஜனவரியில் பொங்கலுக்கு முன்னர் 10 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடந்தது. அனைத்து பிரசுரகர்த்தர்களும் ஸ்டால்கள் வைத்திருந்தார்கள். புத்தகங்கள் நிறைய விற்பனை ஆயின. இங்கு இரவில் பணியும் குளிரும் அதிகம். பகலில் வெயில் கடுமை. இப்பவே கோடை காலம் மாதிரி வெயில் காய்கிறது.

பத்திரிகை உலகம் வழக்கம்போல் இருக்கிறது. புதியபுதிய பத்திரிகைகள் வந்துகொண்டு தான் இருக்கின்ற: துே பத்தரிகை சன் தரமானவை மிகச் சிலவே. பழவந்தாங்கல் (சென்னை ஆ. மகாதேவன் வெளியிடும் முன்றில் நன்றாக இருக்கிறது செகந்தராபாத், சுப்ரபாரதிமணியன் கனவு காலாண்டு இதழை விடாது நடத்திக்கொண்டிருக்கிறார். 8 இதழ்கள் வந்துள்ளன.

அன்பு

ఢ, ఢీ,