பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் §§

ராஜவல்லிபுரம், 1–6–89

அன்பு மிக்க நண்பர்,

வணக்கம். மே 15 முதல் நான் இந்த ஊரில் இருக்கிறேன்.

உங்களிடமிருந்து கடிதம் வராததாலும், நண்பர் ஜெயபாலனிடமிருந்து எவ்விதமான தகவலும் இல்லாததாலும், நான் யாருக்கும் எழுதவில்லை.

நீங்களும் மனைவியும் நலம்தானே? ஜெயபாலன் இப்போது எப்படி இருக்கிறார்? நடக்க, வழக்கமான அலுவல்களை செய்ய முடிகிறதா?

நண்பர் பாரதிசங்கருக்கு மே 15ல் திருமணம் என அழைப்பு வந்தது. வாழ்த்து அனுப்பினேன். அவரிடமிருந்தும் கடிதம் இல்லை. அவர் கல்லுப்பட்டியில் இருப்பார் என்று எண்ணுகிறேன்.

இவ்வூரில் முக்கிய வேலை முடிந்தது. எங்கள் வயல்கள் விற்பனை முடிந்து, மே 25ல் ரிஜிஸ்ட்ரேஷனும் நடந்துமுடிந்தது.

இந்தப் பக்கமெல்லாம் பெரும்காற்று. எப்பவும் காற்று சுழன்று, புழுதியை அள்ளி வீசுகிறது. வெயிலும் அதிகம் தான்.

ஆற்றில் தண்ணீர் நிலைமை மகாமோசம். அசைவதில்லை. அங்கங்கே சிறிது சிறிது தேங்கிக் கிடக்கிறது. சுத்தமாகவும் இல்லை.

'குங்குமம் இதழில் வந்த அமுக்கான் பிசாக கட்டுரையைப் படித்துவிட்டு நீங்கள் எழுதிய 24-5-89 கடிதம், சென்னை சென்று திரும்பி, நேற்று இங்கு வந்தது. சந்தோஷம்.

'இனே எழுத்தாளர் லூசுன் சிறுகதைகள் மதிப்புரை 27-5-89 தினமணியில் வந்தது. லூசுன் கதைகள் நன்றாக இருக்கும்.

இன்று முதல் பள்ளிக்கூடம் திறந்து வழக்கமான பணிகள் தொடரும் என எழுதியிருந்தீர்கள். இம்முறை லீவு நாட்களில் சுந்தர ராமசாமியை சந்தித்தீர்களா? ஜெயடேவி சந்திப்பு உண்டா?

நான் 10ம் தேதி வாக்கில் இங்கிருந்து புறப்பட எண்ணியிருக்கிறேன். உடுமலைப்பேட்டை போகவேண்டும். பெரிய அண்ணாச்சியின் மகள், மருமகன், பேரன்கள் அங்கே இருக்கிறார்கள். போனால், 15 நாட்களாவது தங்க வேண்டியிருக்கும். அதன் பிறகு தான் சென்னை போக முடியும்.

நலம்ாக இருக்கிறேன். சில சிறு பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்தன. (தாமரை முன்றில், புதிய பாசறை) பெரிதாக எதுவும் எழுதவில்லை. -

அன்பு

Nෂ්. ඹ්.