பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் & 7

மழை தொடர்ந்தது. இப்ப இரண்டு நாட்களாக மழை இல்லை. வெயில் சுகமாக இருக்கிறது.

"சுபமங்களாவில் எனது பெரிய மனுஷி பற்றிய செய்தி இப்போது எப்படி இடம் பெற்றதோ தெரியவில்லை. இது ரொம்பப் பழைய சமாச்சாரம். அந்தப் புத்தகம் (யுனெஸ்கோ வெளியீடு) ஜப்பானில் அச்சடிக்கப்பட்டு 1979லேயே வெளிவந்துவிட்டது. இப்ப கண்டா மறுபதிப்புவந்துள்ளதோ என்னவோ! எனக்கு தகவல் எதுவும் இல்லை. சுபமங்களாவில் இச்செய்தியை வாசிப்பவர்கள் புதிய முயற்சி என்று தான் நினைப்பார்கள். உங்களைப் போலவே இன்னும் சில நண்பர்களும் சந்தோஷமும் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்கள். புத்தகங்கள் படிக்க நேரம் கிடைக்கிறதா?

பொன்னிலன் நாவல் புதிய தரிசனங்கள் (3 பாகங்கள்) படித்தீர்களா? நாஞ்சில்நாடன் சதுரங்கக்குதிரை என்றொரு நாவலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். (கோவை விஜயா பதிப்பகம் வெளியீடு). நான்படிக்கவில்லை. நன்றாக இருக்கிறது என்று தி.க.சி எழுதியிருந்தார். நான் சென்னையில் தான் இருக்கிறேன். திருநெல்வேலி க்கோ, வேறு எங்குமோ போகவில்லை.

நண்பர் ஜெயபாலன் எப்படி இருக்கிறார்? தல்லாகுளம் போஸ்ட் ஆபீசில் தான் வேலையா? வீட்டு விலாசம் C.R.0 காலணி ஆலங்குளம், அனையூர் P.C. என்று முன்பு தெரிவித்திருந்தார். இப்போதும் அதே முகவரிதானா? தெரிந்தால், எழுதுக.

அன்பு

&i , &.

ஆதவன் (கே.எஸ்.சுந்தரம்)

5-6-84

அன்பு மிக்க ஆதவன்,

வணக்கம். மே மாதம் நான் உங்களுக்குக் கடிதம் எழுதவேயில்லை. விஷயங்கள் இல்லாமல் இல்லை. ஏனோ ஒரு சோர்வு. சும்மா கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கிடப்பதே - எதையும் படிக்காது, எதையும் எழுதாது, எதுவுமே எண்ணாது 'சவாசனம் பயில்வதே - சுகானுபவமாகத் தோன்றும் ஒரு மனநிலை. எழுதிப் படித்து எண்ணிஎண்ணி என்ன ஆகப்போகிறது; தூங்காமல்