பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 75

சென்னை.

9-3–95

அன்பு மிக்க நண்பர் பசுபதி, வணக்கம்.

உங்கள் 5ம் தேதிக் கடிதம் நேற்று வந்தது. மகிழ்ச்சி. நீங்களும் வீட்டில் எல்லோரும் நலம் என அறிய சந்தோஷம். நானும் மற்றும் அனைவரும் நலமாக இருக்கிறோம். தினமணி'கதிரில் வந்த பிடித்தவை பத்து' என்பதை படித்துவிட்டு எழுதியது சந்தோஷம் தருகிறது. மறுபடியும் சுடரும் கதிரும் தரமும் கனமும் புதுமைப் பண்பும் பெற்றுத் திகழும் என்று தோன்றுகிறது. நீங்கள் நல்ல புத்தகங்களை படித்து ரசிப்பது பாராட்டுதலுக்குரியது. நான் தமிழ் புததகங்கள் தான் படிக்கிறேன். படித்து முடிக்க இயலாத அளவுக்கு தமிழ் புத்தகங்கள் - முக்கியமாக சிறுகதைத் தொகுப்புகள் வந்து சேர்கின்றன. தமிழ் சிறுகதை விதம்விதமான தன்மைகளுடன் வளர்ந்துள்ளது. ஆயினும் சமீபகாலத்து வக்கிரவளர்ச்சி - போஸ்ட் மாடர்னிசம், மேஜிக்கல் ரியலிசம் பாணி எழுத்துக்கள் - வரவேற்கக் கூடியதாக இல்லை. அர்த்தமில்லாக் குழப்ப அபத்தங்கள் அவை.

அன்பு

శ. 3.

கவித்துவன்

சென்னை.

28-11-94 அன்பு நண்பர் கவித்துவன்,

வணக்கம்.

உங்கள் 22ம் தேதிக் கடிதம் கிடைத்தது. இளைய கவிஞர்களின் முயற்சிகள் பற்றிய உங்கள் கருத்து சரிதான். நீங்கள் கவிதைகளை ரசித்து, மேலும் கவிதை நூல்களை படிக்க ஆர்வம் கொண்டிருப்பது வரவேற்புக்கு உரியது. எவ்வளவு தேர்ந்த படைப்பாளியாக இருந்தாலும், பிறரது எண்ணங்களை, பிறரது இதயஒலிகளை, பிறரது கற்பனை ஆக்கங்களை அறிந்து கொள்வதே நல்லது. தமிழ் மொழிப் படைப்புகளை மட்டுமல்லாது இதர மொழிகளின் கவிதைகள் இலக்கியங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். இதனால் எல்லாம் விசாலப் பார்வையும், தெளிந்த சிந்தனையும், ஆழ்ந்த மனோதர்மங்களும் வளம்பெற வாய்ப்பு ஏற்படும். பேரறிஞர்கள்