பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亨怒 வல்லிக்கன்னன்

பலரும் படிப்பதை இறுதிவரை கைக்கொண்டிருந்தார்கள். மாமேதை லெனின், மரணப் படுக்கையில் கிடந்தபோதுகூட, நல்ல நாவலை இன்னொருவரை விட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டு ரசித்ததாக வரலாறு கூறுகிறது. படிப்பதற்கு மனம் வேண்டும். நேரமும் வேண்டும். இவை உங்களுக்கு சித்திப்பதாக

அன்பு

థf. &.

அன்புமிக்க கவித்துவன்,

வணக்கம்.

உங்கள் 2-12-94 5-12-94 கடிதங்கள் மகிழ்ச்சி தந்தன. நான் நலம். நீங்களும் நண்பர்களும் நலமாக இருப்பதை அறிந்து சந்தோஷப்படுகிறேன். காலம் இறக்கை கட்டிக்கொள்ளாமலே பறத்தோடுகிறது. இதோ 1994 செத்துக்கொண்டிருக்கிறது. புது வருஷம் வருகிறது. உண்மையில், புதுவருஷம் என்பதும், மாதம் தேதி கிழமைகள் என்பதும் மனிதர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிற விவகாரம் தான். இரவு-பகல் இவைதான் திசமாகத் தெரிகின்றன. மனிதர்கள் சவுகரியத்துக்காகக் கணக்குகள் சொல்கிறார்கள். 1994 வருடங்களுக்கு முன்பும் காலம் இருந்தது. இப்பவும் திருவள்ளுவர் ஆண்டு, கொல்லம் ஆண்டு, சாலிவாகன சகாப்தம் என்று எத்தனையோ கணக்குகள்! அர்த்தமற்றவை. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கிற நாட்கள் தான் நிஜமானவை. அவற்றை எப்படி எப்படியோ கழிக்கிறார்கள் பலரும். நல்லவனாய் காலம் கழிப்பதே போற்றுதலுக்குரியது. கூடியவரை நல்லனவே எண்ணி, நல்லனவே செய்து ஒவ்வொரு நாளையும் நல்லநாள் ஆக்கவேண்டும். காலம் அந்த வல்லமையை உங்களுக்குத் தரட்டும்.

அன்பு

శl, .

சென்னை.

2ö-3一95 அன்பு மிக்க கவித்துவன்,

வணக்கம். உங்கள் 6-3-95 கடிதம் மூலம் நிலைமைகள் உணர்ந்தேன். வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. எத்தர்கள் அதிகம்தான்.