பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} வல்லிக்கண்ணன்

இராமலிங்கம்

சென்னை.

19–9-90

அன்பு மிக்க இராமலிங்கம், : H

வணக்கம்.

எனது 15-ம் தேதிக் கடிதம் (கார்டு) கிடைத்திருக்கும். அதன்பிறகு, அதிசயம் போல், உங்கள் 1-9-90 கடிதமும் அறிக்கையும் கொண்ட கவர் 17ம் தேதி) ராஜவல்லிபுரத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்தது. விவரங்கள் அறிந்தேன்.

'கல்குதிரை ஒவ்வொரு இதழும் ஒரு சிறப்பு மலராகத் தான் இருக்கிறது. 6வது ஆப்பிரிக்க படைப்பிலக்கியத்தையும், அரசியல் நிலைகளையும் அறிமுகம் செய்கிறது. 7வது இதழ்-அக்ஞேயா சிறப்பிதழ் - அவரது கவிதைகள், கதை, நாவலை தெரிந்துகொள்ள உதவுகிறது. இந்த நாவல் எத்தனை பேரால் விரும்பிப் படிக்கப்பட்டு, ரசிக்கப்படும் என்பது வேறு விஷயம். மாறுபட்ட நிலைமைகளில் வாழ நேர்கிற இரண்டு பெண்களின் உள இயலை விவரமாகக் கூறும் வித்தியாசமான படைப்பு. நன்றாக, திறமையாக, எழுதப்பட்டிருக்கிறது. மணிமேகலை என்ற பெயரில் எழுதுகிறவர் 'நம் காலத்தின் குரல்") பெரிய இன்டலெக்சுவல் என்பதை வெளிப்படுத்த ரொம்பவும் ஆசை உடையவராக இருக்கிறார். இதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது 7வது இதழ்.

அரவிந்தரின் சாவித்திரி காவியம் என்று ஆரம்பித்து, அதுபூதியாளர்கள் அனுபவப் பாடல்கள், விவிலியம் பழைய ஏற்பாடு, சித்தர் பாடல்கள் என்று மிக நீளமாக எழுதியிருக்கிறார். பூராவையும் படித்தேன். நல்ல ஆய்வுதான். இதுமாதிரி விஷயங்களை எத்தனை பேர் படிக்கச் சித்தமாக இருப்பார்கள் என்பதை ஒரு ஆய்வு நடத்தித் தான் தெரிந்துகொள்ள வேண்டும்!

அடுத்த இதழ் டாஸ் டாவ்ஸ்கி சிறப்பிதழ் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாராட்டவேண்டியது தான்.

உங்கள் அறிக்கை. தற்கால நிலைமையை உள்ளது உள்ளபடி சொல்கிறது. நீங்களே உணர்ந்து குறிப்பிட்டுள்ள குழு மனோபாவம், கசப்புணர்வு, தனிநபர் அகங்காரம், போட்டா போட்டி, ஒத்துழைப்பு இன்மை முதலியன வளர்ந்து வருகிறதே தவிர, குறைவதாகக் கானோம். உங்கள் நோக்கங்கள் உயர்ந்தவை. செயலில் எவ்வளவுக்கு வெற்றி பெறும்?. வெளிச்சம் தெரியவில்லை! இருண்ட சூழ்நிலைதான்.