பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வல்லிக்கண்ணன்

மக்களின் வாழ்க்கை நிலை உயரவேண்டும் என்று விரும்பினார். நாடு முழுவதும் வளம் செழிக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட அவர். அந்நியர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்று கருதினார். கிராமமக்கள் நிலப்பிரபுக்களின் கோரப்பிடியிலிருந்தும் நகரமக்கள் தொழிலதிபர்களின் நச்சுப் பிடியிலிருந்தும் விடுபட்டாக வேண்டும் என்று நம்பினார். இம் மாறுதல்களை உண்டாக்குவதற்குத் துணைபுரியக்கூடிய சாதனங் களில் இலக்கியமும் ஒன்று என்பது அவரது நம்பிக்கை

பிரேம்சந்தின் போர்க்குணம் அவருடைய முதலாவது நாவலி லேயே வெளிப்பட்டுவிட்டது. கோயில் மர்மம்' என்ற அந்நாவலில் பூசாரிகள், புரோகிதர்கள், மக்களைச் சுரண்டிக் கொழுத்த மிகந்துகள் ஆகியோரின் உண்மைத் தன்மைகளை அம்பலப் படுத்தினார்.

இரண்டாவது நாவலான பிரேமாவில் விதவையின் துயரங் களை, சமூகம் விதவைகளுக்கு இழைக்கின்ற கொடுமைகளைச் சித்திரித்தார். அந்நாவலின் கதாநாயகன், தனக்குப் பெரியோர் களால் நிச்சயம் செய்யப்பட்ட பணக்காரப் பெண்ணை மணக்காமல், இளம் விதவை ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொண்டு சமூக எதிர்ப்புகளைத் துணிச்சலாகச் சமாளித்து வெற்றி பெறுகிறான்.

பிரேம்சந்த் வெறும் பேச்சு வீரராக இராமல், முற்போக்குக் கொள்கைளைத் தமது செயல்கள் மூலமும் காட்டினார். சிவராணி தேவி என்ற பாலியவிதவையை அவர் திருமணம் புரிந்து, வாழ்க்கை நடத்தினார். அந்நாட்களில் அப்படிச் செய்வதற்கு எவருக்குமே மிகுந்த துணிச்சல் தேவை. அத்தகைய துணிச்சலுடன் தீவிர லட்சியப் பிடிப்பும் உயரிய நோக்கும் பிரேம் சந்திடம் இருந்தன. பிரேம்சந்த் என்பது புனைப்பெயர்தான். அவரது இயல் பெயர் தன்பத்ராய். 1880 ஜூலை மாதம் பிறந்தார். அவருடைய தந்தை அஜைப் லால் தபால் ஆபீசில் குமாஸ்தா வேலை பார்த்தார். வாழ்க்கைவசதிகள் இல்லாத சூழ்நிலையில் வளர்ந்து படித்துத் தேறிய பிரேம்சந்த பிரிட்டிஷ் சர்க்கார் ஊழியராகப் பணிபுரிய வேண்டிய அவசியம் நேரிட்டது.

சர்க்கார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்த வாறே பிரேம்சந்த் உருதுமொழியில் கதை எழுதினார். அக்காலத்தில் நவாப்ராய் என்ற பெயரிலேயே அவருடைய எழுத்துக்கள் பிரசுரமாயின. 1901 முதல் அவர் எழுதத் தொடங்கினார்.

நவாப்ராய் என்ற பெயரில் புரட்சிகரமான கதைகளை எழுதிக் கொண்டிருப்பது, அரசாங்க இலாகாவுக்கு உட்பட்ட ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்தான் என்ற உண்மையைக் கண்டுபிடித்து