பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்ன்க்கண்ணன் கட்டுரைகள் 49 மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகைக்கு கிராம ஊழியன் என்ற பொருத்தமில்லாத பெயர் வாய்த்தது காலம் செய்த கோலம்தான். 1940களில் புதிய பத்திரிகை ஆரம்பிக்க அன்றைய அரசு அனுமதி மறுத்தது. எனவே, பழைய பத்திரிகை ஒன்றை புதிய வடிவத்தில் இலக்கியப்பத்திரிகையாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

திருச்சி நகருக்கு அருகில் உள்ள துறையூர் என்ற சிற்றுாரில் வளர்ந்தது கிராமஊழியன். கவிஞர் திருலோகசீதாராம் ஆசிரியர். அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். இவ் இருவரது கவிதைக் காதலும் இலக்கிய ஆர்வமும், கிராமஊழியன் என்ற அரசியல் பத்திரிகையை மறுமலர்ச்சி இலக்கிய இதழாக மாற்றுவதற்கு அடிப்படை ஆயின. திருச்சியில் வி.ராரா நடத்தி வந்த கலாமோகினியின் வளர்ச்சியும் விறுவிறுப்பும் அவர்கள் ஆசையைத் துண்டிவிட்டன. திருச்சி இலக்கிய நண்பர்களின் நட்பு அதற்குப் பலம் சேர்த்தது.

ஆகவே, கு.ப. ராஜகோபாலனைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு, கிராமஊழியன் 1943 ஆகஸ்டில் மாதம் இருமுறையாகப் பரிணாமம் பெற்றது. பாரதி காட்டிய வழியைப் பணிவுடன் பின்பற்றித் தொண்டு செய்வதைச் சபதமாகக் கொண்டுவிட்டான் என்று அறிவித்து, அது தனது இலக்கியப் பணியில் ஈடுபட்டது. 9வது இதழில், கு.ப.ராஜகோபாலன் ஆசிரியர் என்றும், திருலோக சீதாராம் நிர்வாக ஆசிரியர் என்றும் அறிவிக்கப்பட்டது.

கு.ப.ரா. கும்பகோணத்திலிருந்து ஒவ்வொரு இதழுக்கும் விஷயங்கள் அனுப்பினார். கட்டுரை, கதை, நாடகம், சிவாஜி மன்னன் வரலாறு (தொடர்) என்று அவர் நிறையவே எழுதினார். பாமதி போன்ற அருமையான ஒரங்கநாடகங்களும், வேறு உரை நடைச்சோதனை முயற்சிகளும் கிராமஊழியனில் வந்த கு.ப.ரா. படைப்புகள் ஆகும்.

கு.ப.ரா. ஊழியன் மூலம் எழுத்தாற்றல் மிகுந்த இளைஞர் களையும், ஒவியத்திறமை பெற்ற இளைய கலைஞர்களையும் அறிமுகப்படுத்தினார். எழுத்தாளர்களில் தி.ஜானகிராமன், கிரா, கோபாலன் முக்கியமானவர்கள். கோபுலு, ஸாரதி ஒவியர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

ந. பிச்சமூர்த்தி மனநிழல் கட்டுரைகளையும், யாப்பில்லாக் கவிதைகளையும் கிராமஊழியனில் எழுதிவந்தார்.

கு.ப.ரா. இப்பத்திரிகையின் துணையோடு அதிகமான சாதனைகள் புரிந்திருக்கக்கூடும். ஆனால், காலம் வஞ்சித்து விட்டது. 1944 ஏப்ரல் இறுதியில் அவர் மரணம் அடைந்தார்.

1944 மார்ச் மாதக் கடைசியில் காலம் வல்லிக்கண்ணனை

g!-3