பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 74 மற்றவர்களின் இலக்கு பணம் அல்ல. ஒரு தரநிர்ணயம். இந்த இரண்டாவது குழுவினர் தங்களது இலக்கு நோக்கி நடக்கும்போது இடையில் குறுக்கிடும் முதல் தடை பணம்.

சில நேரங்களில் பணத்தால் இலட்சியங்களை உடைக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களிலுமே இலட்சியங்களால் பணத்தை உடைக்கமுடிவதில்லை. ஆகவே ஏதாவதோர் இலட்சியத் துடன் ஒர் ஏட்டை ஆரம்பிக்கிறவர்கள் இடையில் குறுக்கிடும் பணத்துடன் மோதிப்பார்த்து முடியாமல் தோற்றுவிடுவதுண்டு. இந்தத் தோல்வியே பெருமைக்குரியது தான்.

இவர்களுக்கு ஒர் எதிர்ப்புக் குரல்கூட நாம் கொடுக்கா விட்டால் இவைகளை நாமும் ஏற்றுக் கொண்டவர்களாகிறோம் என்று கூறிக்கொண்டு வெளிவரத் தொடங்கும் ஒரு சிற்றேட்டின் இலக்கு பணம் அல்ல. இத்தனை சீரழிவுகளையும் அழித்தொழித்து விட்டு, தனது இலக்கை அடைந்து விடுவதென்பதும் சாத்தியமான தொன்றல்ல. ஆனாலும் அவர்களுடைய நோக்கம், நாம் வாழும் காலத்தில் நடக்கும் அந்த அநீதிகளுக்கு நாமும் உடந்தையாகிவிடக் கூடாது என்னும் விழிப்புணர்வு போற்றற்குரியது.

தமிழ்நாட்டிலும் சரி, இங்கும் சரி இலக்கியச் சிற்றேடுகளின் தோற்றம் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த மாறுதல் களை நிகழ்த்தியிருக்கின்றது என்பதை மறுக்கமுடியாது.

1930ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட ஈழகேசரி, 1946 ஜனவரியில் தொடங்கிய பாரதி, 1946 மார்ச்சில் தொடங்கிய மறுமலர்ச்சி, அதற்குப்பின் தோன்றிய இலக்கியச் சிற்றேடுகளும் தம்மாலான பணியினைச் செய்தே மறைந்துள்ளன. 'தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 18, 1984) -

ஈழகேசரி பல வருட காலம் நடைபெற்ற வாரஇதழ் ஆசிரியர் சுன்னாகம் பொன்னையா. சோ. சிவபாதசுந்தரம் ஈழ கேசரியில் பணிபுரிந்திருக்கிறார். ஈழத்துச்சிறுகதைப் படைப்பாளிகள் பலரும் அதில் கதை எழுதினார்கள். பிற்காலத்தில் நல்ல நாவல் களைத் தொடர்கதையாகப் பிரசுரித்தது. இலக்கியக்கட்டுரைகள், சர்ச்சைகள், புத்தக விமர்சனங்கள் இடம்பெற்றன.

மறுமலர்ச்சி - சில இதழ்களே வெளிவந்தன. வரதர், மகாகவி, அ.ந. கந்தசாமி. அ.செ. முருகானந்தன் போன்ற அந்நாளைய படைப்பாளிகள் இதில் எழுதினார்கள்.

'பாரதியை’ கே. கணேஷ் ஆரம்பித்து நடத்தினார். திரு.வி.க. விடம் தமிழ் படிப்பதற்காக, சென்னைக்கு வந்த கணேஷ் இடது சாரிகள் பலருடனும் பழகும் வாய்ப்பைப் பெற்றார். நவசக்தி