பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜாலி அண்ணாச்சி 217

மதிக்கவா செய்றிங்க? அவங்க எவ்வளவு வேதனைப்படுவாங்க, எப்படி பாதிக்கப்படுவாங்க என்பதை யோசிக்காமலே தானே நீங்க ரகளை செய்கிறீங்க? அதே பாடத்தை உங்க சிநேகிதர்கள் உங்களிடமே காட்டி விட்டாங்க' என்று சாந்தா சொன்னாள்,

நண்பர்கள் அட்டகாசமாய் சிரிததார்கள். பரமசிவமும் சேர்ந்து சிரித்தார்.

'சிரியுங்க, சிரியுங்க! ஒக்கச் சிரித்தால் வெக்கமில்லே என்பாங்க' என்று கூறிச் சிரித்தவாறே வீட்டுக்குள் போனாள் சாந்தா.

(தேவி, 1980)


சின்னவன்



புத்தகங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு, கடியாரத்தைப் பார்த்தான் முருகன். மணி ஒன்பது அடிக்க ஐந்து நிமிடங்கள் இருந்தன.

'சரியான நேரம்தான். இப்பவே புறப்பட்டு மெது மெதுவாக நடந்தால் ஒன்பதரைக்கு ஸ்கூல் போய் சேர்ந்திரலாம். பையன்களோடு பேசி விளையாட நேரம் இருக்கும் முதல் மணி அடிக்க ஐந்து நிமிஷத்துக்கு முன்னாலே வகுப்புக்குப் போகலாம்' என்று எண்ணவும் அவனுக்க உற்சாகம் ஏற்பட்டது.

'அம்மா, நான் ஸ்கூலுக்குப் போறேன்’ என்று உரக்கச் சொல்லியபடி வாசல் நடையை அணுகினான் முருகன். அந்த சமயம் திடுதிடுவென்று வந்தார் அண்ணாச்சி ஒட்டமும் இல்லாத, சாதாரண நடையுமில்லாத வேகத்தில் வந்த அவர் படபடப்புடன் காணப்பட்டார்.

'எலே, பசுமாடு அத்துக்கிட்டு ஓடிட்டுதுடா... போ... போயி தேடிப் பத்திக்கிட்டு வா... வடக்கே குளத்துப் பக்கம் தான் போகும்... ஓடு ஓடு... சீக்கிரமாப் போ’ என்று பெரியவர் உத்திரவிட்டார்.

முருகனுக்கு எரிச்சல் ஏற்பட்டது, 'சனியன் பிடிச்ச எழவு... இந்தப் பசுவோட இது ஒரு தொல்லை’ என்று அவன் மனம் முணமுணத்தது. 'பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. நான் போகனும் அண்ணாச்சி' என்ற தீனக்குரலில் சொன்னான்.

'பள்ளிக்கூடம் பத்து மணிக்கு தாலே! இன்னும் மணி ஒன்பது கூட ஆகலே. அதுக்குள்ளே என்ன அவசரம். போயி