பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருமை 229

இவர்களில் சிலர் எப்பவாவது வேட்டைக்குப் போகிறோம் என்று கோஷ்டி சேர்த்துக் கொண்டு மலைப் பகுதிகளில் சுற்றி திரிவதும் உண்டு; திரும்பி வரும்போது மலை அணில், முயல், மிளா என்று எதையாவது சுட்டுக் கொன்று பெருமையாகச் சுமந்து வருவார்களே தவிர கரடியை பிடித்தார், புலியை சுட்டு கொன்றார், காட்டுப் பன்றியை தீர்த்துக்கட்டினார் என்ற பெருமையை எவரும் பெற்றதில்லை. பெறமுடிந்ததில்லை.

'ஒரு கடுவா நின்னுது பாருங்க. குறிவச்சேனா? அது எப்படியோ பாய்ந்து ஒடிப் போயிட்டுது!: 'ஈத்தம் பழத்தை தின்றுக் கிட்டிருந்த கரடி எங்க கண்ணிலே பட்டது. வசமா அடிக்கிறதுக்கு கொள்ளும் பக்கத்திலே போவோம்னு நகர்ந்தோம். அதுக்கு சத்தம் கேட்டிருக்கு விருட்னு பாய்ஞ்சு கண் சிமிட்டுறது க்குள்ளாறே மறைஞ்சிட்டுது, எப்படிப் போச்சு எங்கே மறைஞ்சுதுன்னே தெரியலே போங்க.

இன்னோரன்ன கதைகள் மலைமேல்போய் திரும்பியவர்களால் சுவையாக ஒலி பரப்பப்படுவது வழக்கமே தவிர, புலியை - கரடியை அல்லது கொடிய பெரிய வனவிலங்கு எதையாவது ஒன்றைக் குறி வைத்துச் சுட்டுக்கொன்று, வெற்றிகரமாக வேட்டையாடக் கூடியவர் என்றபெருமை புன்னைக்காடுப் பிரமுகர் எவருக்கும் கிடைத்ததில்லை.

அதாவது' 'போனசித்திரை' வரையில். அதற்குப் பிறகு தான் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

புன்னைக்காடுப் பெரிய வீட்டுப் பிரமுகர்களில் - மச்சுக் கட்டி ஒடுபோட்டு' வசதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த கல் வீட்டுக்காரர்களில் - ஒருவர் மகிழ்வண்ணம் பிள்ளை. அவர் வீட்டில் அவருடைய அப்பா காலத்துத் துப்பாக்கியும் நவீன ரிவால்வரும் இருந்தன. அவர் வேட்டைக்குப் போய் வருவதும் உண்டு.

'அதிர்ஷ்டம் இருந்தால் பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்து கூட விழும் என்று சிலர் சொல்வர். அதேபோல’ அவருக்கு கீர்த்திப்பிரதாபம் வந்து சேர வேண்டும் என்கிற அதிர்ஷ்டம் இருந்ததுபோலும். அதனால் அவர் வேட்டை என்று குழு சேர்த்துக் கொண்டு போகாமல் வீட்டோடு இருந்தபோது கூட, வேட்டை அவரைத் தேடிவந்து அருள் புரிந்து விட்டது!

அப்போது இரவு ஏழு அல்லது ஏழரை தான் இருக்கும் ஆனாலும் இருட்டு 'கருங்கும்மென்'று கவிந்து ராத்திரி ரொம்ப நேரம் ஆகியிருக்கும் என்பது போன்ற ஒரு மயக்கத்தை கொடுத்துக்கொண்டிருந்தது. வானத்தில் ஒரு வெள்ளி கூடத்